சாம்சங் நிறுவனம் Galaxy M வரிசையின் புதிய ஸ்மார்ட்போனை ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு Galaxy M34 5G என்று பெயரிடப்பட்டுள்ளது. சாம்சங் சமீபத்தில் கைபேசியின் சில சிறந்த அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் நோ ஷேக் கேமரா இந்த மொபைலில் இடம்பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், கைபேசியில் 120Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதைவிட கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தரமான 6,000mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் மொபைலை பயன்படுத்த முடியும். அத்தகைய Samsung Galaxy M34 5G-ன் விலை மற்றும் அம்சங்களை தெரிந்து கொள்வோம்...


மேலும் படிக்க | 2023 இறுதியில் அறிமுகம் ஆகிறது OnePlus 12: கசிந்த விவரங்கள் இதோ


Samsung Galaxy M34 5G கிடைக்கும்


Samsung Galaxy M34 5G இப்போது இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் Amazon மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இந்த மொபைலில் மான்ஸ்டர் ஷாட் 2.0 வசதி இருப்பதால், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் கேமராவிற்குப் பின்னால் உள்ள AI இன்ஜினை இயக்குகிறது மற்றும் நுகர்வோர் 4 வீடியோக்கள் மற்றும் 4 புகைப்படங்களை ஒரே ஷாட்டில் எடுக்க அனுமதிக்கிறது.


Samsung Galaxy M34 5G டிஸ்ப்ளே


Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் 120Hz சூப்பர் AMOLED திரையுடன் உங்களுக்கு வழங்கப்படும். இது விஷன் பூஸ்டர் தொழில்நுட்பத்துடன் வரும். பிரகாசமான சூரிய ஒளியிலும் சிறந்த காட்சியை வழங்கும் உணர்வை இது தரும். சாம்சங் இந்த ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இது உங்களுக்கு 2 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வசதியை வழங்கும்.


Samsung Galaxy M34 5G விவரக்குறிப்புகள்


Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1080 SoC மூலம் இயக்கப்படலாம். இது கேமராவிற்கான 8MP செகண்டரி சென்சார் மற்றும் 5MP மூன்றாவது சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஃபோனில் 13எம்பி முன்பக்க கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Amazon Sale 2023: 1.5 டன் ஏசிக்கு 48 சதவீதம் சலுகை! உடனே முந்துங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ