Samsung நிறுவனத்தில் புதுவரவான Galaxy S10 Lite மிக விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், ஸ்மார்ட்போன் இப்போது பிரபல விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. என்றபோதிலும் இந்த பட்டியல் “விரைவில் வரும்” என்பதைத் தவிர கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.


Galaxy S10 Lite என்பது சாம்சங்கின் பிரீமியம் பிரிவை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய வரவாகும். முந்தைய பதிப்பில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் சில சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வருகிறது. உதாரணமாக, பின்புறத்தில் ஒரு புதிய செவ்வக கேமரா தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள பஞ்ச்-ஹோல் கேமரா Galaxy S10 Lite-ன் மேல் வலது மூலையில் மேல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, சாம்சங் Galaxy S10 Lite 6.7 அங்குல முழு HD+ super AMOLED டிஸ்ப்ளே உடன் Infinity-O கட்அவுட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 855 செயலியில் 8 GB ROM மற்றும் 128 GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் இயங்கும் என தெரிகிறது.


சாம்சங் Galaxy S10 Lite-ன் பின்புற கேமரா அமைப்பில் 5 MP மேக்ரோ சென்சார், 48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளன. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மூலம் வேகமாக சார்ஜிங் ஆதரவுடன் இயக்கப்படுகிறது. கேலக்ஸி எஸ் 10 லைட் ப்ரிஸம் ஒயிட், ப்ரிஸம் பிளாக் மற்றும் பிரிசம் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது.


Galaxy S10 Lite தவிர, சாம்சங் Galaxy Note 10-ன் லைட் மாறுபாட்டையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy Note 10 Lite ஆனது  6.7" full HD+ super AMOLED Infinity-O display கொண்டுள்ளது. 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6 GB மற்றும் 8 GB ROM வகைகளில் 128 GB நினைவகத்துடன் கிடைக்கிறது. இது 4,500 mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.


Galaxy Note 10 Lite ஆனது 12 மெகாபிக்சல் ultra-wide-angle லென்ஸ், 12 மெகாபிக்சல் wide-angle lens மற்றும் 12 மெகாபிக்சல் telephoto lens உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இது 64-bit octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆரா க்ளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் என மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.


சாம்சங் Galaxy S10 Lite மற்றும் Note 10 Lite இரண்டும் லாஸ் வேகாஸில் உள்ள நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் (CES) முன்னதாக காட்சிப்படுத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சரி இந்த புதிய வருவுகளில் விலை என்னவாக இருக்கும்?....


சாம்சங் Galaxy S10 Lite Rs. 57,990-க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் Note 10 Lite ஆனது Rs. 59,990-க்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.