இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S9, Galaxy S9+ மொபைல் போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானது சாம்சங். 2018ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் தனித்துவம் மிக்க தயாரிப்பாக Samsung Galaxy S9, Galaxy S9+ போன்கள் இருக்கும் என கருதப்படுகிறது. 


இந்த போன்களில் உயர் ரக கேமரா சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஒளியிலும் கூட மிக நேர்த்தியாக புகைப்படம் எடுக்க முடியம். மேலும் ‘ஸ்லோ மோஷன்’ வீடியோ மற்றும் இரட்டை ஸ்பீக்கர் வசதியும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.


ஆக்யுமென்ட்டெட் ரியாலிட்டி தொழில் நுட்பம் மூலம் புகைப்படங்களை எமோஜிகளாக மாற்றும் நவீன தொழில்நுட்பமும் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.


Samsung Galaxy S9 மொபைல் போன், 5.8 இஞ்ச் எச்டி டிஸ்பிளேயுடனும், 64, 128, 256 ஜிபி மெமரி மற்றும் 4GB RAM, 3000mAh  பேட்டரி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Samsung Galaxy S9+ 6.2- இஞ்ச் டிஸ்பிளே, 64, 128, 256 ஜிபி மெமரி, 6GB RAM, 3500mAh  பேட்டரி வசதியும் கொண்டுள்ளது.


இந்த போன்கள் மார்ச் 16ம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த போன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.


விலை விவரம்:-


Samsung Galaxy S9 : 64 ஜிபி - Rs 57,900
Samsung Galaxy S9 : 256 ஜிபி - Rs 65,900


Samsung Galaxy S9+ : 64 ஜிபி - Rs 64,900
Samsung Galaxy S9+ : 256 ஜிபி - Rs 72,900