மார்க்கெட்டை கலக்க வரும் சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5..! லீக்கான விலை பட்டியல்
Samsung Galaxy Z Fold 5; சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5 அதன் வெளியீட்டு தேதியை நெருங்கி வரும் நிலையில் அதன் விலை உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் லீக்காகி ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை கலங்கடித்து வருகின்றன.
ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சாம்சங்க் நிறுவனம் அடுத்ததாக சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5 மொபைலை வெளியிட இருக்கிறது. இது பற்றிய தகவல் தான் இப்போது ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. சாம்சங்க் கேலக்ஸி Z Fold 5 விலை மற்றும் அதன் அசத்தல் விவரங்கள் மற்ற ஸ்மார்ட்போன் விற்பனையில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அனுமானிக்கப்பட்டுள்ளதால், பலரும் இந்த மொபைல் குறித்த விவரங்களை ஆவலுடன் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
சாம்சங்க் நிறுவனம் இப்போது ஃபோல்ட்... அதாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஓப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் ஃபோல்ட் மொபைல்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருவதால், சாம்சங்க் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது. அதற்கேற்ப Galaxy Z Fold 5 அழகான வடிவமைப்பில் கவனம் செலுத்தியிருக்கும் சாம்சங்க், அதனை அட்டகாசமாக வடிவமைத்துள்ளது.
Galaxy Z Fold 5 மொபைலைப் பொறுத்தவரை ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் மொபைலுடன் ஒப்பிடும்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஐஸ் யுனிவர்ஸில் என்ற டிப்ஸ்டர் கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கொடுத்திருக்கும் தகவல்களின்படி, மற்ற மொபைல் நிறுவனங்கள் புதிய வாட்டர் டிராப் கீல் வடிவமைப்பை செய்திருப்பதால், Galaxy Z Fold 5 மொபைலிலும் அத்தகைய அம்சம் இருக்கும் என கூறியுள்ளார். ஐபிஎக்ஸ்8 தரத்தில் இந்த வாட்டர் டிராப் கீல் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Xiaomi Mix Fold 2, Vivo X Fold+ மற்றும் Oppo Find N2 போன்ற சமீபத்தில் வெளியிடப்பட்ட மொபைல்களில் இத்தகைய வாட்டர் டிராப் கீல் இருந்தது. IPX8 மதிப்பீட்டில் வாட்டர் டிராப் சோதனையில் நல்ல மதிப்பெண்ணை பெற்ற Galaxy Z Fold 4 மற்றும் Galaxy Z Flip 4 மொபைலைப் போலவே இந்த மொபைலும் அதிக மதிப்பெண்கள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களின் மொபைல்கள் இந்த வாட்டர் டிராப் கீல் கொண்டிருந்தபோதும் சாம்சங்க் மொபைல் போன்களை ஒத்தளவுக்கான மதிப்பெண்களை பெறவில்லை.
Galaxy Z Fold 5 மொபைல் S-Pen ஸ்டைலஸ் ஹோல்டரை கொண்டிருக்கும். Qualcomm Snapdragon 985 5G SoC இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும், டிப்ஸ்டர் அனுமானத்தின் அடிப்படையில் கூறியுள்ளனர். புதிய அம்சங்கள் அதிகம் இருப்பதால், நிச்சயம் அதற்கேற்றவ விலை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ