5G: சிம் கார்டை 5ஜிக்கு மாற்றுவதில் நடைபெறும் மோசடி! உஷார் மக்களே
4ஜி சிம் கார்டை 5ஜிக்கு மாற்றுவதை குறி வைத்து மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் வல்லுநர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2022-ல் இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக ஜியோ மற்றும் ஏர்டெல் சில நகரங்களில் சேவையைத் தொடங்கியுள்ளன. படிப்படியாக இந்த சேவை நாட்டின் பிற நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றன. 5ஜி சேவையைப் பயன்படுத்த உங்கள் 4ஜி சிம்மை மேம்படுத்த வேண்டும். இந்த செயல்முறையின் போது, சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
5ஜிக்கு சிம்கார்டை மேம்படுத்துவதை குறி வைத்து வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய புதிய முறையை ஸ்கேமர்கள் கொண்டு வந்துள்ளனர். அலாட்ர்டாக இருக்கவில்லை என்றால், உங்கள் பணம் காலி. எப்படி காலி செய்கிறார்கள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பல மாநில காவல் துறையினர் 5ஜி சிம் மோசடிக்கு எதிராக மக்களை எச்சரித்து வருகின்றனர். இந்த எஸ்எம்எஸ் மூலம் மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.
எப்படி மோசடி செய்கிறார்கள்?
சைபர் செக்யூரிட்டி பிரிவுகள் சிம் மேம்படுத்தல் விஷயத்தில் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று எச்சரித்து வருகின்றனர். சைபர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, மோசடி செய்பவர்கள் 4ஜி சிம்மை 5ஜிக்கு மேம்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள். தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் பெயரில் இணைப்புகள் அனுப்பப்படுகின்றன. அப்படி அனுப்பும் மோசடியாளர்கள், உடனடியாக OTPயையும் கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். OTP-ஐ உள்ளிட்ட பிறகு, அவர்கள் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை திருடிக் கொள்கிள்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆபத்தான மோசடியில் இருந்து பாதுகாப்பதற்கும், உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பழைய 4ஜி சிம்மில் கூட 5ஜி நெட்வொர்க் வேலை செய்ய முடியும், இதற்காக உங்கள் சிம்மை மேம்படுத்த வேண்டியதில்லை. உங்கள் மொபைல் எண்ணின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்ரேட்டர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை தவிர மற்ற போலியாக வரும் மெசேஜ்களில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்து தகவல்களை கொடுக்காதீர்கள்.
மேலும் படிக்க | Watch Video: கர்தவ்யா பாதையாக மாறும் தில்லி ராஜ பாதை; பிரம்மிக்க வைக்கும் காட்சி!
மேலும் படிக்க | NRI Remittances மற்றும் கிரெடிட் வளர்ச்சியில் அதிகரிப்பை காணும் பெடெரல் வங்கி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ