500 ரூபாயில் 18 OTT, 150 சேனல்கள் & 300Mbps வேகம் கொடுக்கும் பிராட்பேண்ட் திட்டம்!
Broadband Service Packs : பிராட்பேண்ட் சேவையைத் தேர்ந்தெடுக்கும்போது, எந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. சந்தையில் கிடைக்கும் சிறந்த சேவைகள் இவை...
இணையம் இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது என்றும் சொல்லும் நிலைக்கு இன்று வந்துவிட்டோம். சில மணி நேரங்கள் இணையத்தை முடக்கினால், தனித்திருப்பதுபோல தோன்றுகிறது. வாழ்க்கை தொடர்பான அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுவதும், தற்போது மக்கள் OTT-ஐ அதிகம் பயன்படுத்துவதும் இண்டர்நெட்டின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. நமது இணையத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பல பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன. உங்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
எக்ஸிடெல் பிராட்பேண்ட் 300எம்பிபிஎஸ்
Excitel இன் திட்டம் மாதம் 499 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒன்பது மாதங்களுக்கு இந்த திட்டத்தில் இணைந்தால், கூடுதலாக மூன்று மாதங்கள் இலவச சேவையைப் பெறுவார்கள். அதாவது ஒன்பது மாத விலையில் மொத்தம் 12 மாதங்கள் இணைய சேவை கிடைக்கும். இது தவிர, இந்தத் திட்டத்தில், Amazon Prime, Disney + Hotstar, SonyLIV மற்றும் ALTBalaji உட்பட 18 OTT இயங்குதளங்களின் சேவைகளையும் பெற முடியும்.
இதுமட்டுமின்றி இதில் 150க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கும். 300 Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இந்தச் சலுகை தற்போது இந்தியாவில் 35க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கிறது.
Excitel இன் பிற திட்டங்கள்
Excitel இன் ரூ.734 திட்டம் 21 OTT ஆப்ஸ் மற்றும் 37 பிரீமியம் கேபிள் டிவி சேனல்களுடன் 400 Mbps வரை வேகத்துடன் கிடைக்கிறது. ரூ.604 மாதாந்திர திட்டம் 300 Mbps வேகம் மற்றும் 21 OTT சேனல்களை வழங்குகிறது. ரூ.554 திட்டத்தில் 200எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 37 பிரீமியம் டிவி சேனல்களை அனுபவிக்க முடியும்.
மேலும் படிக்க | 91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்!
ஜியோ ஃபைபர் - 399
இந்த பேக் ரூ.399 விலையில் வருகிறது மற்றும் 30Mbps இணைய வேகத்தை வழங்குகிறது. ஜியோ ஃபைபர் திட்டம் மாதத்திற்கு 3,300ஜிபி FUP டேட்டா வரம்புடன் வருகிறது மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் OTT இயங்குதளம் கிடைக்கவில்லை.
ஜியோ ஃபைபர் - 699
இந்த பேக் 100Mbps இணைய வேகத்துடன் வருகிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை (FUP: 3300 GB) வழங்குகிறது. இது தவிர, வரம்பற்ற குரல் அழைப்புகளையும் பெறலாம். இந்த திட்டத்தில் OTT தளங்களுக்கான சந்தா இல்லை.
ஜியோ ஃபைபர் - 999
ஜியோவின் பிராட்பேண்ட் திட்டம் ரூ.999 விலையில் வருகிறது. இந்த திட்டம் 150Mbps இணைய வேகத்துடன் வருகிறது மற்றும் Amazon Prime, Disney+ Hotstar, JioCinema Premium, SonyLIV, ZEE5, Sun NXT, Hoichoi, Universal+ உள்ளிட்ட 14 ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. Lionsgate Play, Discovery+, ShemarooMe, Eros Now, ALT Balaji, JioSaavn ஆகியவற்றுக்கான சந்தாவும் கிடைக்கிறது. இந்த பேக் வரம்பற்ற டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ