வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி!! வாட்ஸ்அப்பில் மிகப்பெரிய டேட்டா மீறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு, ஆன்லைனில் கசிந்து, அநாமதேய விற்பனையாளரால் பல ஹேக்கிங் குழுக்கள் மற்றும் சமூகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. வாட்ஸ்அப் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதால், நான்கில் ஒரு பங்கு, அதாவது 25 சதவீத பயனர்களின் தரவு சமரசம் செய்யப்பட்டிருப்பது மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் செயலிக்கு பெரும் பின்னடைவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் முதலில் சைபர் நியூஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா இன்னும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. இந்த கசிவு ரஷ்யா, இத்தாலி, எகிப்து, பிரேசில், ஸ்பெயின் மற்றும் பல நாடுகளை உள்ளடக்கிய 80 நாடுகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இது தொடர்பாக மேற்கோள் காட்டிய ஒரு ஆதாரம், அதன் ட்விட்டர் கைப்பிடி வழியாக ஒரு விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளது. இது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவு ஆன்லைனில் கசிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


தரவுகளை விற்பனைக்கு வைத்த நபர், அமெரிக்காவில் இருந்து 32 மில்லியன் பயனர்களின் பதிவுகள் தொகுப்பில் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இந்த தொகுப்பில் எகிப்து, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவிலிருந்து மில்லியன் கணக்கான பயனர்களின் பதிவுகளும் உள்ளன. 


மேலும் படிக்க | யாரும் கண்டே பிடிக்க முடியாத ஸ்பை கேமரா! விலை விவரம் இதோ 


அறிக்கையின்படி, அமெரிக்க தரவுத்தொகுப்பு (டேட்டாசெட்) 7,000 டாலருக்கு விற்பனைக்கு உள்ளது. இங்கிலாந்தின் தரவுத்தொகுப்புக்கு 2,500 டாலர் செலவாகும். தாங்கள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் இங்கிலாந்தைச் சார்ந்த 1,097 எண்களை ஆதாரமாகப் பகிர்ந்து கொண்டதாக சைபர்நியூஸ் அறிக்கை கூறியது. இந்த எண்களை ஆராய்ந்து, அவை அனைத்தும் வாட்ஸ்அப் கணக்குகளை சேர்ந்தவை என்பதைசைபர்நியூஸ் உறுதிப்படுத்தியது.


இத்தகைய தகவல்கள் பெரும்பாலும் ஸ்மிஷிங் மற்றும் விஷிங் போன்ற சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் பயனருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கும். அதன்பிறகு, பயனர் தனது கிரெடிட் கார்டு அல்லது பிற தனிப்பட்ட விவரங்களை வழங்குமாறு கேட்கப்படுகிறார். அதன் பின்னர் நிதி மோசடிக்கு ஆளாகிறார்.


தரவு மீறலால் மெட்டாவுக்குச் சொந்தமான இயங்குதளம் பாதிக்கப்படுவது இது முதல் நிகழ்வு அல்ல. கடந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து 6 மில்லியன் பதிவுகள் உட்பட 500 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது. கசிந்த தரவுகளில் தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் இருந்தன.


2019 ஆம் ஆண்டில், 419 மில்லியன் பேஸ்புக் மற்றும் 49 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவு அம்பலமானது. அதே ஆண்டில், மற்றொரு தரவு மீறலும் நடந்தது. அதில் 267 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்தன. இந்த வகையில், அடிக்கடி பயனர்களின் தரவுகள் கசிந்து, அவர்களது தனியுரிமை பாதிக்கப்படுவதும், அவர்கள் நிதி மோசடிக்கு ஆளாவதும், பயனர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஏர்டெல்லை வம்பிழுக்கிறதே ஜியோவுக்கு வேலையா போச்சு! 2 ஜிபி டேட்டா ரேட் இவ்வளவு தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ