ஒரு காலத்தில் அனைவரும் விரும்பும் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் மாடலாக பிளாக்பெர்ரி இருந்தது. இதனுடைய சிறப்பம்சமே செக்யூரிட்டி தான். அமெரிக்க ஜனாதிபதிகள் கூட தங்களின் செக்யூரிட்டிக்காக இந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினர். இதனால், இதனுடைய மார்க்கெட் மதிப்பு என்பது ஜெட் வேகத்தில் அதிகரித்துது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. பிளாக்பெர்ரியின் (Blackberry) வளர்ச்சியை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2007 ஆம் ஆண்டு அதன் சந்தை மதிப்பு 600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏறத்தாழ அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 50 விழுக்காடுக்கும் மேலாக இதன் வசமே இருந்தது என்றால், இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.


ALSO READ |ஜனவரி-4 முதல் இந்த வகையான Blackberry போன்கள் செயல்படாதா?


2002 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக பிளாக்பெர்ரி நிறுவனம் தங்களின் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அந்த மொபைலில் கலர், வைஃபை, மெசேஜிங் ப்யூச்சர்ஸ உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு இவற்றில் சில கூடுதல் ப்யூச்சர்களை சேர்த்து, அடுத்த வெர்சனை வெளியிட்டது. இதுவரை மார்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்த பிளாக்பெர்ரியின் வீழ்ச்சி, ஆப்பிள் நிறுவனம் தங்களின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்பட்டுதியதில் இருந்து தொடங்கியது.


ஐபோன்களில் இருந்த சிறந்த பியூச்சர்கள் வாடிக்கையாளர்களை அதன் பக்கம் திருப்பியதால், பிளாக்பெர்ரியின் விற்பனை குறைந்தது. இருப்பினும், புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்த அந்த நிறுவனத்துக்கு, போட்டியாக பல நிறுவனங்கள் சந்தையில் வர ஆரம்பித்தது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், 2016 ஆம் ஆண்டு முதல் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு Security Software Services அளிக்கப்போவதாக பிளாக்பெர்ரியின் சிஇஓ அறிவித்தார். அதன்பின்னர், கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி BlackBerry 7.1 OS மற்றும் அதற்கு முந்தைய version -களின் சர்வீசஸ் ஜனவரி 4 முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. அதன்படி, பிளாக்பெர்ரியின் பழைய வெர்சன்களில் அழைப்புகள், குறுஞ்செய்தி அனுப்புதல், அவசர அழைப்பு எண்ணான 911 ஆகியவற்றை கூட இன்றுமுதல் அழைக்க முடியாது.


ALSO READ | ALSO READ | இன்டர்நெட் இல்லாமல் Google Map பயன்படுத்துவது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR