ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி, குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு
Airtel Cheapest Recharge Plan: ஏர்டெல் நிறுவனம் இந்த புதிய திட்டத்தின் சோதனையை இவ்விரு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் இந்தியா முழுவதும் அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் பயனர்களுக்கு இது அதிர்ச்சியான செய்தியாகும். அதன்படி பார்தி ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்ட விலையை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த ரீசார்ஜ் விலை மாற்றமானது ஹரியானா மற்றும் ஒடிசா பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். தொலைத்தொடர்பு ஆபரேட்டர் இந்த இரண்டு மாநிலங்களிலும் அதன் ரூ.99 திட்டத்தின் விலையை ரூ.155 ஆக உயர்த்தியுள்ளது, மேலும் விரைவில் நாடு முழுவதும் இந்த ரீசார்ஜ் பிளான் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஏர்டெல்லின் ரூ.99 திட்டத்தில், பயனர்கள் 28 நாட்களுக்கு 200எம்பி டேட்டா மற்றும் வினாடிக்கு 2.5 பைசா காலிங் வசதியைப் பெறுகிறார்கள். இப்போது அதன் இடத்தில், ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் அன்லிமிடெட் காலிங், 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
ஏர்டெல்லின் ரூ.155 ரீசார்ஜ் திட்டம்
இருப்பினும், ரூ.99 ரீசார்ஜ் திட்டத்துடன் ஒப்பிடும்போது, ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் நிறைய பலன்களை பெறுகிறார்கள். அதன்படி ரூ.155க்கு, பயனர்கள் 300 எஸ்எம்எஸ் மற்றும் 1ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். இது 99 ரீசார்ஜ் திட்டத்தில் கிடையாது. மேலும் ரூ.155 திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்களாக இருக்கும். அதேசமயம் ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்களாக இருக்கும்.
இது தவிர, பயனர்கள் 155 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் Wynk Music மற்றும் Hellotunes இலவசமாக பெறுவார்கள். ஆனால் இந்த ரீசார்ஜ் திட்டம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் அல்லது Wynk Music மற்றும் Hellotune ஐப் பயன்படுத்தாத பயனர்களுக்கு விலையுயர்ந்த ஒப்பந்தமாகும்.
அறிக்கையின்படி, ஏர்டெல் இந்த திட்டத்தை ஹரியானா மற்றும் ஒடிசாவில் சோதனை செய்து வருகிறது. வெற்றி பெற்றால் இந்த திட்டமானது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏர்டெல் 2021 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற மாற்றங்களை ஏர்டெல் செய்தது. அதன்படி அப்போது ரூ.79 ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.99 ஆக உயர்த்தியிருந்தது ஏர்டெல் நிறுவனம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ