ட்விட்டர் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
டிவிட்டரில் வரும் வீடியோக்களை மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் பதவிறக்கம் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம். மிகவும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ட்விட்டர் பிரபலமான சமூக ஊடகமாக மாறிவிட்டது. எலோன் மஸ்க் இதனை வாங்கிய பிறகு டிவிட்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. டிவிட்டரில் வீடியோ, புகைப்படம் என எதுவேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படி பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. அந்த அம்சத்தை டிவிட்டர் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இன்னொரு செயலி அல்லது வலைதளத்தின் உதவியுடன் டிவிட்டரில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்காக பல செயலிகள் மற்றும் வலைதளங்கள் இருக்கின்றன.
ஆண்ட்ராய்டு மொபைலில் ட்விட்டர் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ப்ளே ஸ்டோரில் டன் கணக்கில் ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றை கொண்டு நீங்கள் ட்விட்டர் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், Tweeload பயன்படுத்தலாம். ஏனெனில் இது யூசர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. Android சாதனங்களில் சீராக இயங்குகிறது.
மேலும் படிக்க | Elon Musk: ரகசியமாக புதிய AI நிறுவனத்தை உருவாக்கிய எலோன் மஸ்க்..! சாட்ஜிபிடி கலக்கம்
Tweeload செயலி மூலம் வீடியோ பதிவிறக்கம் செய்யும் வழிமுறை
* நீங்கள் விரும்பும் ட்விட்டர் வீடியோவின் லிங்கை காபி செய்யுங்கள்.
* Tweeload செயலிக்கு சென்று URL- பகுதியில் பேஸ்ட் செய்யுங்கள்
* இப்போது பதிவிறக்க பொத்தானை அழுத்தவும். உங்கள் வீடியோக்கள் தானாகவே உங்கள் கேலரியில் சேமிக்கப்படும்.
ட்விட்டர் வீடியோவை கணினியில் பதிவிறக்குவது எப்படி?
உங்கள் டெஸ்க்டாப்பில் ’ட்விட்டர் வீடியோ டவுன்லோடர்’ போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி ட்விட்டர் வீடியோக்களை எளிதாக பதிவிறக்கலாம். ட்விட்டர் வீடியோக்களை சில எளிய படிகளில் பதிவிறக்கம் செய்து, அவற்றை உடனடியாகச் சேமிக்க இது உங்களை அனுமதிக்கிறது.
* உங்கள் ட்விட்டரில் உள்நுழைந்து, நீங்கள் வீடியோவைப் பதிவிறக்க விரும்பும் ட்வீட்டுக்குச் செல்லவும்.
* வீடியோவின் லிங்கை காபி செய்யவும்.
* இப்போது https://twittervideodownloader.com/-க்கு வந்து ட்வீட் URL-ஐ பெட்டியில் பேஸ்ட் செய்யவும்.
* பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்யவும். உடனடியாக வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும்
மற்ற செயலிகள் மற்றும் வலைதளங்கள் எவை?
TWSaver, DownloadTwitterVideo மற்றும் SaveTweetVid போன்ற பல இலவச ஆன்லைன் கருவிகள் உள்ளன. ட்வீட் URL-ஐ உள்ளீட்டு வீடியோவைப் பதிவிறக்க முடியும். க்ரோம் அல்லது பயர்பாக்ஸிற்கான ட்விட்டர் வீடியோ டவுன்லோடர் அல்லது ட்விட்டர் மீடியா அசிஸ்ட் போன்ற தேடுபொறி எக்ஸ்டன்ஸை பதிவிறக்கி, அதன் மூலம் வீடியோக்களை பதிவிறக்கலாம்.
மேலும் படிக்க | Cheapest Electric Cars: இவைதான் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ