ஒரே போனில் 2-2 WhatsApp மற்றும் Instagram பயன்படுத்த டிப்ஸ்
ஸ்மார்ட்டாக யோசித்தால் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் மற்றும் இரண்டு இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகளை உபயோகிக்கலாம்.
இப்போதெல்லாம் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் இரட்டை சிம் விருப்பத்துடன் வருகிறது. அதாவது, யூசர்கள் தங்கள் தொலைபேசியில் இரண்டு சிம்களை வைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதில் பெரும்பாலான யூசர்கள் இரண்டு சிம்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் போலவே வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சில சமூக ஊடக தளங்களிலும் இரட்டைக் கணக்குகளை இரண்டு எண்களில் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
மேலும் படிக்க | Whats App Update: ’சீக்கிரம் கொண்டு வாங்க’ புதிய அப்டேட்டை அறிவித்த வாட்ஸ்அப்
ஒரே போனில் அதனை பயன்படுத்த முடியாது என்றாலும் ஸ்மார்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப பல ஸ்மார்டான வழிகளையும் இன்பில்டாக கொடுக்கிறார்கள். அதனால், நீங்கள் டூயல் செயலிகளை பயன்படுத்த முடியும். ஒரு சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பலருக்கும் தெரியாத இந்த டெக்னிக்கை எப்படி பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்ளட்டும். பல ஸ்மார்ட்போன்கள் இப்போது குளோன் ஆப் எனப்படும் இயல்புநிலை அமைப்பைக் கொண்டுள்ளன, இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கின் இரண்டு கணக்குகளை இயக்கலாம். தற்போது, இந்த அம்சம் Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei மற்றும் Honor போன்ற ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
* மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களின் மொபைல் எண் இருந்தால், அந்த மொபைலில் செட்டிங்ஸூக்கு செல்லுங்கள்.
* இதன்பிறகு டூயல் ஆப் அல்லது குளோன் ஆப் ஆப்ஷனுக்குச் செல்லவும்.
* டூயல் ஆப் அல்லது குளோன் ஆப் என்ற ஆப்ஷன் கிடைத்தால், அதை கிளிக் செய்யவும்.
* இப்போது நீங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலியின் விருப்பத்தைக் காண்பீர்கள்.
* இவற்றில் எந்த செயலியை நீங்கள் குளோன் செய்ய விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்
* இதற்குப் பிறகு, அந்த செயலியின் குளோன் உங்கள் தொலைபேசியில் தயாராக இருக்கும்.
* இப்போது நீங்கள் அந்த செயலியைத் திறந்து மற்றொரு கணக்கில் லாகின் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | iPhone 13 Pro Max: மெகா தள்ளுபடியில் ரூ.2500-க்கு ஆப்பிள் ஐபோன்
ஒருவேளை உங்கள் போனில் இந்த அம்சம் இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். அதற்கும் வழி உள்ளது. அதாவது, இரண்டு செயலிகளை பயன்படுத்த உதவும் சில செயலிகள் உள்ளன. அந்த செயலிகளை டவுன்லோடு செய்து டூயல் கணக்குகளை பயன்படுத்தலாம். உதாரணமாக, Dual App Wizard, Parallel மற்றும் DoubleApp போன்ற செயலிகள் உள்ளன. இந்த ஆப்ஸை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும். அதன் பிறகு, நீங்கள் மற்றொரு கணக்கை இயக்க விரும்பும் சமூக ஊடக தளத்தை லாகின் செய்து பயன்படுத்துங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR