iPhone 13 Pro Max போனுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெறும் 2500 ரூபாய்க்கு உங்களின் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தள்ளுபடியை நீங்கள் விட்டுவிடவேண்டாம். மீண்டும் இப்படியொடு சூப்பரான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. ஆப்பிள் ஐபோன்களிலேயே டாப் பிராண்டு ஸ்மார்ட்போன் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்.
அதன் விலையை கேட்டால் உங்களை கிறுகிறுக்க வைத்துவிடும். ஏனென்றால் சாதாரண நாட்களில் இந்த போனின் விலை லட்சத்தை கடந்த விற்பனை செய்யப்படுகிறது. மிட் ரேஞ்ச் பட்ஜெட் உள்ளவர்கள் வழக்கமாக இந்த ஃபோனைப் பெற முடியாது. ஆனால் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த போனை இப்போது வாங்கும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது வெறும் 2,500 ரூபாய்க்கு இந்த போனை வாங்குவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குறைந்த விலையில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு
ஐபோன் நிறுவனத்தின் தள்ளுபடி
iPhone 13 Pro Max 128 GB ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க இ-காமர்ஸ் இணையதளம் மிகக் குறைந்த EMI கொடுக்கிறது. எந்த வட்டியும் இல்லாமல் இந்த இஎம்ஐ ஆப்சனை கொடுத்துள்ளது. 36 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,377 செலுத்த வேண்டும். இந்த இஎம்ஐ உங்களுக்கு வசதியாக இருந்தால் அந்த ஐபோன் வாங்கும் கனவுக்கு இப்போதே தயாராகுங்கள்.
எப்படி வாங்குவது?
அமெரிக்காவில் 85,490 ரூபாய் விலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் iPhone 13 Pro Max 128 GB அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் அசல் விலை ரூ. 85,490. ஆனால் நீங்கள் அதை AT&T தளத்தில் இருந்து பெற்றால், 36 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். அதாவது, 2,377 ரூபாய் இம்எம்ஐ செலுத்த வேண்டும். 0% வட்டி விகிதத்தில் மாதாந்திர தவணையில் இகாமர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
சிக்கல் என்ன?
ஐபோன் வாங்க அருமையான ஆஃபரை விட்டிருக்கும் அமெரிக்க இகாமர்ஸ் நிறுவனம், ஒரு செக்கையும் வைத்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் போன் வாங்குபவர்கள், திடீரென அந்த நிறுவனம் இந்த ஆஃபரை நிறுத்தினால் உடனே முழுத் தொகையையும் செலுத்த தயாராக இருக்க வேண்டும். இந்த அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஸ்பெஷல்
ஆப்பிளின் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். உள்ளடக்கத்தைப் பொறுத்து புதுப்பிப்பு விகிதங்களை மாற்றக்கூடிய எல்டிபிஓ பேனலைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR