Smartphone Hacking: ஹேக்கர்களை அழைப்பது நீங்கள் தான் - ஸ்மார்ட்போன் எச்சரிக்கை
ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு ஹேக்கிங் மிகப்பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு யூசர்கள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் ஹேக்கிங் என்பது இப்போது அதிகமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, முக்கியமான தகவல்கள் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் செய்து திருடுப்படுகின்றன. ஹேக்கிங் செய்பவர்கள் நமக்கு தெரிந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. இணையத்தில் உலாவும் உங்கள் ஸ்மார்ட்போனை யார் வேண்டுமானாலும் ஹேக்கிங் செய்ய முடியும். ஹேக்கிங் செய்வதற்கு தொலைபேசி எண்கள் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தொலைபேசி எண் இல்லாமல் கூட உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக்கிங் செய்யலாம்.
மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்
பலர் செல்போன் எண் தெரியாமல் யாரும் ஹேக்கிங் செய்ய முடியாது என்ற மாயை இருக்கின்றனர். அண்மையில் ஹேக்கிங் குறித்து பிரபல Bitdefender என்ற ஆன்டிவைரஸ் நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. புழக்கத்தில் இருக்கும் 35 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள் ஹேக்கர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறதாம். அதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் அப்டேட்டுகளை அவர்கள் குறித்த நேரத்தில் செய்திருக்கவில்லையாம்.
மேலும் படிக்க | 151 கி.மீ செல்லும் சூப்பரான ஸ்பிளெண்டர் பைக்
அந்த நிறுவனங்கள் வெளயிடும் ஸ்மார்ட்போன் அப்டேட்டுகளை யூசர்கள் சரியாக கவனித்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கொடுக்கும் பாதுகாப்பு அப்டேட்டுகள் கிடைக்காமல், ஹேக்கர்களின் குறிக்கு நீங்கள் இலக்காக நேரிடும். இதைத்தான் பைட் டிபெண்டர் ஆன்டிவைரஸ் நிறுவனமும் தன்னுடைய ஆய்வில் குறிப்பிட்டு காட்டியுள்ளது. ஒரு சிலருக்கு அப்டேட் என்றால் என்ன? என்பது கூட தெரிவதில்லை என்று கூறியுள்ள அந்த நிறுவனம், சிலர் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இருப்பதாக கூறியுள்ளது. இதனால், ஹேக்கர்கள் அந்த ஸ்மார்ட்போனை குறிவைத்து சைபர் அட்டாக்கை நிகழ்த்துகிறார்களாம். பண மோசடி நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR