சமூக வலைதள கண்காணிப்பு திட்டத்தை திரும்பப்பெற்றது மத்திய அரசு!!
சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு!!
சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு!!
திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த எம்எல்ஏ மவா மொய்த்ரா வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ஈமெயில் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் சமூக ஊடக மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்கான மென்பொருள் உருவாக்கித் தரும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு விரும்புவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டினை கண்காணிப்பின் கீழ் கொண்டுவர ஆசைப்படுவதை போல் தோற்றம் அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கை மீண்டும் இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற கண்காணிப்பு மையங்கள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இத்திட்டத்தை திரும்பப் பெற்றதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.