விஜய் சேல்ஸ் எலக்ட்ரானிக் நிறுவனம் ஆப்பிள் டேஸ் (Apple Days) விற்பனையை தொடங்கியுள்ளது.   இதன்மூலம் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்யப்படும் பலவிதமான பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.  இந்த அதிரடி ஆஃபர் நிறைந்த விற்பனையானது அந்நிறுவனத்தின் இணையதள பக்கங்களிலும் மற்றும் கடைகளிலும் 2021 டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இனி டிவியில் பார்க்கும் உணவுகளை நாவால் சுவைக்கலாம்!


இந்த ஆப்பிள் டேஸ்(Apple Days) விற்பனை மூலம் நாடு முழுவதிலும் உள்ள 110-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் ஸ்டோர்களிலுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க ஆஃபர்களையும், கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகின்றது.  ஆப்பிள் டேஸ்(Apple Days) விற்பனையின் போது, iPhone 13 , Apple Watch Series 7 , AirPods 3rd gen, AirPods Pro, MacBook Air M1, iPad Air, HomePod, Apple Care போன்ற பலவற்றிற்கு அதிகளவில் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது.



ஆப்பிள் டேஸ்(Apple Days) விற்பனையில் தள்ளுபடியில் விற்கப்படும் சில பொருட்களின் விபரங்கள் இதோ,


ரூ.79,990 என்று இருந்த iPhone 13-ன் சிறப்பு விலை ரூ.75,900க்கு கிடைக்கும், இதற்கு ரூ.6000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.69,900 என்று இருந்த iPhone 13 mini-ன் சிறப்பு விலை ரூ.66,400க்கு கிடைக்கும், இதற்கு ரூ.6000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.119,900 என்று இருந்த iPhone 13 pro-ன் சிறப்பு விலை ரூ.113,900க்கு கிடைக்கும், இதற்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.41,900 என்று இருந்த apple Watch series 7-ன் சிறப்பு விலை ரூ.39,100க்கு கிடைக்கும், இதற்கு ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரூ.18,500 என்று இருந்த AirPods 2nd Gen-ன் சிறப்பு விலை ரூ.12,400க்கு கிடைக்கும், இதற்கு ரூ.1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.


மேலும் வாடிக்கையாளரின் தற்போதைய ஸ்மார்ட்போனில் ரூ.8,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.  லேப்டாப்களில் M1 சிப் கொண்ட Macbookbook Air ரூ. 77,610 முதல், M1 சிப் கொண்ட Macbook pro ரூ.103,610 முதல், M1 ப்ரோ சிப்செட் கொண்ட மேக்புக் ப்ரோ ரூ.171,200 முதல் தொடங்குகிறது. மேலும் அணியக்கூடிய பொருட்களில், Apple Watch Series 7 ரூ. 36,100 முதல் தொடங்குகிறது, மேலும் apple watch SE ரூ.25,900 முதல் தொடங்குகிறது. விஜய் சேல்ஸ் ஏர்போட்கள் மற்றும் ஹோம் பாட் மினி ஆகியவற்றிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  இந்த அனைத்து வகையான தயாரிப்புகளுக்கும் HDFC வங்கி அட்டையை பயன்படுத்துவோருக்கு சலுகை கிடைக்கிறது.


ALSO READ | iPhone பிரியர்களுக்கு அட்டகாச செய்தி: iPhone 14 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR