புது டெல்லி: டிக்டோக் (TikTok), யுசி பிரவுசர் (UC browser) மற்றும் ஷேர்இட்  (ShareIT) போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை (Indian Intelligence) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, சீனாவுடன் இணைக்கப்பட்ட 52 மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களிடம் அறிவுறுத்துமாறு இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் மத்திய அரசாங்கத்திடம் (Government of India) கேட்டுக் கொண்டுள்ளன. இவை பாதுகாப்பானவை அல்ல, இந்தியாவுக்கு (India) வெளியே ஒரு பெரிய அளவிலான தரவைப் பிரித்தெடுப்பதில் இவை வேலை செய்கின்றன எனவும் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜூம், (Zoom), குறுகிய வீடியோ பயன்பாடு டிக்டாக் (TikTok) மற்றும் யுசி பிரவுசர் ( UC browser), ஸேண்டெர் (Xender),ஷேர்இட் (ShareIT) மற்றும் கிளீன் மாஸ்டர் (Clean-Master) போன்ற பிற பயன்பாடு மற்றும் உள்ளடக்க பயன்பாடுகள் இதில் அடங்கும். இந்த பயன்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்  ஒவ்வொன்றாக மதிப்பிடப்பட வேண்டும் என்று ஏஜென்சிகள் நம்புகின்றன.


இந்த செய்தியும் படிக்கவும் | தெரிந்து கொள்வோம் : உங்கள் TikTok கணக்கை முழுமையாக நீக்குவது எப்படி...


பயன்பாடுகளின் முழு பட்டியல் 


TikTok


Vault-Hide


Vigo Video


Bigo Live


Weibo


WeChat


SHAREit


UC News


UC Browser


BeautyPlus


இந்த செய்தியும் படிக்கவும் | Aadhaar-ல் பெயர், முகவரி, மொபைல் எண்ணைப் புதுப்பிக்க எவ்வளவு செலவாகும்? அறிக


Xender


ClubFactory


Helo


LIKE


Kwai


ROMWE


SHEIN


NewsDog


Photo Wonder


APUS Browser


VivaVideo- QU Video


Perfect Corp


CM Browser


இந்த செய்தியும் படிக்கவும் | BSNL 4 ஜி மேம்படுத்தலுக்கு சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு


Virus Cleaner (Hi Security Lab)


Mi Community


DU recorder


YouCam Makeup


Mi Store


360 Security


DU Battery Saver


DU Browser


DU Cleaner


DU Privacy


Clean Master – Cheetah


CacheClear DU apps studio


Baidu Translate


Baidu Map


இந்த செய்தியும் படிக்கவும் | Boycott China!! இந்தியா-சீனா எல்லை தகராறு - IPL தொடரை பாதிக்கலாம்


Wonder Camera


ES File Explorer


QQ International


QQ Launcher


QQ Security Centre


QQ Player


QQ Music


QQ Mail


QQ NewsFeed


WeSync


SelfieCity


Clash of Kings


Mail Master,


Mi Video call - Xiaomi


Parallel Space


இந்த செய்தியும் படிக்கவும் | அச்சப்படும் சீனா!! Galwan Valley-ல் கொல்லப்பட்ட வீரர்களின் தகவலை மறைக்கும் China


இவற்றில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் பயன்பாடு குறித்து ஏற்கனவே பல செய்திகளில் வந்துள்ளது. இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி - கம்ப்யூட்டர் எமர்ஜென்சி  ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியாவின் (சிஇஆர்டி-இன் - CERT-in) பரிந்துரையின் பேரில் ஜூம் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு ஆலோசனையை  வெளியிட்டது. உள்துறை அமைச்சக ஆலோசனைக்கு நிறுவனம் பதிலளித்திருந்தது, இது பயனர் பாதுகாப்பு குறித்து தீவிரமாக இருப்பதாக வலியுறுத்தியது.