Electric Bike: சந்தையில் அறிமுகம் ஆனது அட்டகாசமான Rugged e-Bike, வலிமையில் இல்லை நிகர்
பண்டிகை காலத்தை முன்னிட்டு பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அசத்தலான மின்சார வாகனத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இதிலிருந்து மீள, மின்சார பைக்குகளுக்கு மாற மக்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அசத்தலான மின்சார வாகனத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை ஓடும்
அறிக்கையின்படி, இந்திய நிறுவனமான e-Bike Go சமீபத்தில் ஒரு மிகச்சிறந்த மின்சார பைக்கை (Rugged e-Bike) அறிமுகப்படுத்தியது. இந்த மின்சார பைக்கின் பாடி, எஃகு சட்டகம் மற்றும் கிரேடில் சேசிஸால் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை அறிமுகம் ஆகியுள்ள மின்சார பைக்குகளில் இதுவே வலிமையான பைக் என்று கூறப்படுகிறது. இந்த பைக்கை (Bike) ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை ஓடும் என்று கூறப்படுகிறது.
ALSO READ:10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்
3.5 மணி நேரத்தில் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது
இந்த மின்சார பைக்கில் (Electric Bike) 3KW மோட்டார் உள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. இந்த மின்சார பேட்டரி (Rugged e-Bike) 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அதன் பிறகு, பைக் மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்லும். இந்த பைக்கில் 12 ஸ்மார்ட் சென்சார்கள் உள்ளன.
பைக் 4 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த மின்சார பைக் சிவப்பு, நீலம், கருப்பு மற்றும் ரக்ட் ஸ்பெஷல் ஆகிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரக்டு இ-பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.84,999 ஆகும். இந்த பைக்கின் டாப் மாடலின் விலை ரூ.1.05 லட்சம் ஆகும். இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கினால், மின்சார வாகனங்கள் (Electric Vehicles) வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1 லட்சம் முன்பதிவு
Rugged e-Bike-ன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கான முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாகவும், அதற்கான தொடர்ச்சியான தேவை இருப்பதாகவும் நிறுவனம் கூறுகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ரூ.499 செலுத்தி இந்த மின்சார பைக்கை முன்பதிவு செய்யலாம். இந்தத் தொகை திரும்பப் பெறத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR