வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தி: எளிய வழியில் சாதாரண ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக்கலாம்

சாதாரண ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக மாற்றும் மின்சார கிட்டை ஒரு நிறுவனம்  உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணச்சுமை குறையும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2021, 12:59 PM IST
வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தி: எளிய வழியில் சாதாரண ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக்கலாம் title=

இந்தியாவில் மின்சார வாகனங்களின் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பல வாகன உற்பத்தியாளர்கள் மின்சார வாகன பிரிவில் அதிக முதலீடு செய்வதை நாம் கண்டு வருகிறோம். மின்சார வாகனங்கள் அதிகரிப்பதால், போக்குவரத்தால் எற்படும் மாசுபாடு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இவற்றின் அதிக விலை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. சராசரியாக இந்தியாவில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) வாங்க சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். இது பெரும்பாலான மக்களுக்கு மிகப்பெரிய தொகையாகத் தெரிகிறது.

இந்த காரணியை மனதில் வைத்து, ஸ்டார்யா மொபிலிட்டி என்ற நிறுவனம் ஒரு மின்சார கிட்டை உருவாக்கியுள்ளது. இது உங்களிடம் இருக்கும் சாதாரண ஸ்கூட்டரை மின்சார ஸ்கூட்டராக மாற்றும். இதற்கு ஆகும் செலவு மின்சார ஸ்கூட்டரை வாங்கும் செலவில் பாதி அளவுதான் இருக்கும். இந்த செயல்முறை பற்றி முதலில் ரஷ்லேன் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:Tata-வின் Cheapest Electric Car: ஒரே சார்ஜில் 500 கி.மீ. ஓடும் அட்டகாசமான Altroz EV

நிறுவனத்தின் படி, தினசரி பயணத்திற்கு ஸ்கூட்டரைப் (Scooter) பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனர்களுக்கு இந்த மின்சார கிட் சரியான தீர்வாக இருக்கும். இந்த கிட்டில் ஒரு பேட்டரி மற்றும் வேறு சில உபகரணங்களை உள்ளன. இதன் விலை சுமார் ரூ .39,000 ஆகும்.

இந்த ‘கன்வர்ஷன் கிட்’-ல் 6.0 கிலோவாட் திறன் கொண்ட ஒரு மோட்டார் உள்ளது. இது 250A கண்டிரோலருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்யா மொபிலிட்டி மோட்டருக்கு காப்புரிமை பெற்றுள்ளது. மேலும் இது 75-80 கி.மீ ரேஞ்சை அளிக்க வல்லது. இந்த மோட்டார் வழங்கும் அதிகபட்ச வேகம் 75 கிமீ ஆகும். மற்றும் 0-40 கிமீ வேகத்தை இதனை பயன்படுத்தி 3.7 வினாடிகளில் அடைய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

பெட்ரோல் (Petrol) விலை உயர்வை கருத்தில்கொண்டு பார்த்தால், இந்த கிட் மூலம் நிறுவனம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடையக்கூடும் என்று தெரிகிறது. இருப்பினும், முடிவில், வாடிக்கையாளர் இந்த கிட்டுக்கு ஆதரவு அளிக்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ALSO READ: Bike Mileage Tips:உங்கள் பைக்கின் மைலேஜை மேம்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News