தற்போது ப்ளூடூத் ஹெட்செட்டுகள் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது.  அதிலும் குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் தான் இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  வீட்டிலிருந்து பணிபுரிவார்கள் ஆன்லைனில் மீட்டிங் அட்டன் செய்வதற்கும், அதேபோல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளவும் ஹெட்போன்கள் மற்றும் TWS உதவிபுரிகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து வகையான ஹெட்போன்களும் தரமுடன் இருந்தாலும், மக்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்த விரும்புகின்றனர்.  சிலர் விலை குறைவாகவும் அதே சமயம் தரமாகவும் எதிர்பார்க்கின்றனர், சிலர் நன்றாக ஒலி கேட்கவேண்டும் என எண்ணுகின்றனர்.  இதுபோல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.  ஹெட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் சாதனங்களை தரமானதாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், பட்ஜெட் விலைக்குள்ளும் தயாரிக்கிறது,  தற்போது எண்ணற்ற வகையில் ஹெடப்போன்கள் களமிறங்கியுள்ளது.  உதாரணமாக நெக்பேண்ட்ஸ், ஒயர்லெஸ் இயர்பட்ஸ், இயற் ஹெட்போன்ஸ் போன்றவை.


ALSO READ | Realme GT 2 Pro: லீக் ஆனது முக்கிய தகவல்கள், காத்திருக்கும் பயனர்கள்


நெக்பேண்ட்ஸ் ஹெட்செட்டிற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.  அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது உதவியாக இருக்கிறது.  குதிரை காலனி போன்ற பட்டையை கழுத்தில் அணிந்துகொண்டு நடப்பதற்கும், ஓடுவதற்கும் எளிதாக இருக்கிறது.  மேலும் பட்ஜெட் விலைக்குள், அதே சமயம் அதிக தரத்துடனும் கிடைக்கும்  நெக்பேண்ட்ஸ் ஹெட்செட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


1) Sennheiser CX 120BT :


இந்த ஹெட்செட்டின் விலை ரூ.1999 மட்டுமே.  இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு, சௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.  6 மணி நேரம் மின்சக்தி தாங்கக்கூடிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  அழைப்புகளை ஏற்பதற்கு, பாடலுக்கும் என்று மொத்தமாக 3 பட்டன்கள் உள்ளது.  அதிர்வெண் 17Hz to 21,000Hz என்ற அளவில் அமைக்கப்பட்டுள்ளது.


2) Oppo Enco M31 :


ரூ.2000க்குள் கிடைக்கும் ஹெட்செட்டில் இவை சிறந்தது.  இதன் விலை ரூ.1999 மட்டுமே.  இவை பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இவை நீர் மற்றும் தூசியிலிருந்து பாதிப்படையாமல் இருக்கும்.  9.22mm அளவும், அதிக மின்சக்தி கொண்ட பேட்டரியையும் கொண்டுள்ளது.  பிளே/பாஸ் பட்டனை இருமுறை அழுத்துவதன் மூலம் பாஸ் மோடை பெறலாம்.



3) OnePlus Bullets Wireless Z :


இந்த வகை ஹெட்போன்கள் USB டைப் அதிவேக சார்ஜிங் வசதியுடன் உள்ளது, 20 நிமிடம் சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.  இதன் விலை  ரூ.1999 மட்டுமே.  இவை பார்ப்பதற்கு அழகாகவும், குறைந்த எடையுடனும் உள்ளது.  ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் இயர்போனை இணைக்கக்கூடிய Quick Switch அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


4) Sony WI-C200 neckband :


இவை நீண்ட கேபிள்களுடன், சிறிய இயர்பட்களுடனும் கிடைக்கிறது.  இவை குறைந்தது 15 மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, உதாரணமாக 10 நிமிட சார்ஜில் 1 மணி நேரம் இயங்கும் திறன் உள்ளது.  இதன் விலை ரூ.1799 மட்டுமே.



5) JBL Tune 215BT :


இவை பட்ஜெட் விலையில் பல தரமான ஹெட்போன்களை வழங்கி வருகிறது.  இவை 16 மணி நேரம் சார்ஜ் இறங்காமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் விலை ரூ.1799 மட்டுமே.  சிறந்த ஒலித்திறனையும், சௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


ALSO READ | Flipkart சூப்பர் சலுகை: ரூ. 30,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 449-க்கு வாங்கலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR