ஸ்மார்ட்போனில் உள்ள மெஸ்சேஜ் - போட்டோ நீக்குவது குற்றமா... உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?
முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மொபைல் போன்களின் பயன்பாடு என்பது தொலைத் தொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 100 கோடியை தாண்டியுள்ளது. முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
குற்றங்கள் நிகழும்போது, சட்ட அமலாக்க அதிகாரிகள் சந்தேக நபர்களின் மொபைல் ஃபோனை (Smartphone) கைப்பற்றி, அதில் மேகொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள், அனுப்பட்ட செய்திகள், இணைய வரலாறு, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் போன்ற தகவல்களை திரட்டி ஆதாரங்களை சேகரிக்கிறார்கள். இந்நிலையில், தொலைபேசியிலிருந்து அனுப்பட்ட அல்லது பெற்ற செய்திகள், புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு வரலாறு ஆகியவற்றை நீக்குவது குற்றமாக கருதப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
போனில் உள்ள தகவல்களை நீக்குவது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றைக் கூறி தெளிவுபடுத்தியுள்ளது. போனில் இருந்து செய்திகளை அழிப்பது குற்றமாகாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மொபைல் போன்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. இதன் காரணமாக போனில் உள்ள மெஸ்ஸேஜ்கள் மற்றும் அழைப்புகள் அடிக்கடி நீக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. மொபைல் போன்கள் ஒருவரின் தனிப்பட்ட உடைமையாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, தனியுரிமை அல்லது தொழில்நுட்ப காரணங்களுக்காக தரவை நீக்குவது குற்றச் செயலாக கருதப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ... 2ஜிபி டேட்டா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்
நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய நீதிமன்றம், போனில் பெறப்பட்ட அல்லது அனுப்பட்ட மெஸ்சேஜ்களை நீக்கம் தற்செயலாக செய்யும் விஷயம் தான் என்றும், சாட்சியங்களை சிதைக்கும் குற்றமாக கருதக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்கின்றன.
இந்தியாவில் மொபைல் போன்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட சட்டங்கள் இல்லை என்றாலும், சில நடவடிக்கைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என விதிகள் கூறுகின்றன. மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி செய்திகள் அல்லது அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல்களை அனுப்புவது இந்திய நீதிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. இதேபோல், தனியுரிமையை மீறுவது, தனிப்பட்ட தகவல்களை கசியவிடுவது அல்லது சமூக ஊடகங்களில் ஆபாசமான புகைப்படங்களைப் பகிர்வது ஆகியவையும் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ