கொல்கத்தா: உள்ளூர் EMU தொடர்வண்டிகளின் மகளிர் பெட்டிகளில் CCTV கேமிரா வைக்க தென் கிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளூர் தொடர்வண்டிகளில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, தொடர்வண்டிகளில் உள்ள மகளிர் பெட்டிகளில் CCTV கேமிரா வைக்க தென் கிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த திட்டத்தினை தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய ரயில்வே என அனைத்து தொடர்வண்டிகளிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து தென் கிழக்கு ரயில்வே செய்திதொடர்பாளர் சஞ்சய் கோஷ் தெரிவிக்கையில், "பெண்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விரைவில் 12 பெட்டிகள் கொண்ட ரேக் சென்னையில் இருந்து கொண்டுவரப்படவுள்ளது. இந்த பெட்களில் CCTV உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


ஒவ்வொரு கோச்சிலும் 7 CCTV கேமிராக்கள் பொருத்தப்படும் எனவும், வரும் மார்ச் மாதத்தில் இதேப்போன்ற வசதிகளுடன் கூடிய 2 ரேக்-குள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது தென்-கிழக்கு ரெயில்வேயின் கீழ் 30 உள்ளூர் தொடர்வண்டிகள் 188 வழித்தடங்களில் சேவை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது!