ஹோம் டெலிவரி: கொரோனா வைரஸ் பரப்புக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஒரு கார் வாங்க சலுகையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், நீங்கள் புக் செய்த கார் உங்கள் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும். மார்ச் 31 க்குப் பிறகு பிஎஸ் IV வாகனங்களை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பதை உங்களுக்கு சொல்கிறோம். ஆனால் தற்போது அமலில் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், பிஎஸ் IV வாகனங்களை விற்பனை செய்ய மேலும் 10 நாட்கள் கிடைத்துள்ளது. அதாவது, கார் நிறுவனங்கள் அவற்றை இப்போது விற்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Tata Motors இதற்காக ஆன்லைன் முன்பதிவு சலுகையை கையில் எடுத்துள்ளது. இதை நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து முன்பதிவு செய்யலாம். TATA நிறுவனம் ஒவ்வொரு காரையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும் அவ்வாறு புக் செய்யப்படும் கார், அவர்களின் வீட்டிற்கு நேரடியாக டெலிவரியும் செய்யப்படும்.


கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து மாருதி  இந்தியா (Maruti India) தனது வாடிக்கையாளருக்கான கார் உத்தரவாதத்தையும் சேவைக்கான காலக்கெடுவையும் நீட்டித்துள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது . Maruti நிறுவனத்தின் கூற்றுப்படி, இலவச சேவை, உத்தரவாதம் போன்றவை 15 மார்ச் 2020 முதல் 2020 ஏப்ரல் 30 வரை காலாவதியாகும் வாடிக்கையாளர்கள், இப்போது 30 ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்தியா யமஹா (Yamaha) மோட்டார் தனது வாடிக்கையாளர்களுக்கு தர பராமரிப்பு அணுகுமுறையின் கீழ் கூடுதலாக 60 நாட்கள் நீட்டிக்க அறிவித்துள்ளது.


மறுபுறம், மாருதி சுசுகி இந்தியா புதன்கிழமை 2020 மார்ச் மாதத்தில் அதன் விற்பனை 47 சதவீதம் குறைந்து 83,792 ஆக இருந்தது என்று கூறினார். அதே நேரத்தில், எம்ஜி மோட்டார் மார்ச் மாதத்தில் 1,518 யூனிட்டுகளை விற்பனை செய்தது. 


மாருதி நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,58,076 கார்களை விற்பனை செய்தது. அதன் உள்நாட்டு விற்பனை 2019 மார்ச் மாதத்தில் 1,47,613 யூனிட்டுகளிலிருந்து 2020 மார்ச் மாதத்தில் 46.4 சதவீதம் குறைந்து 79,080 ஆக இருந்தது.