Netflix, Hotstar-க்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் TATA sky..! மிஸ் பண்ணிடாதீங்க
புதிய பெயருடன் சந்தையில் களமிறங்கியுள்ள டாடா ஸ்கை டிடிஹெச் நிறுவனம், வாடிக்கையாளர்களை ஈர்க்க ஓடிடி தளங்களுக்கான ஆஃபர்களை அள்ளி வழங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய டிடிஹெச் நிறுவனங்களுள் ஒன்றான டாடா ஸ்கை நிறுவனம், ’டாடா ப்ளே’ என்ற புதிய பெயருடன் புத்தம் புதுப்பொலிவுடன் சந்தையில் களமிறங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் ஓடிடி ப்ளாட்ஃபார்மில் கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களின் சந்தாக்களை அட்டகாசமான ஆஃபரில் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஓடிடி ஆஃபர்களைப் பொறுத்தவரை Binge சேவையில் இருக்கும் OTT இயங்குதளங்கள் மற்றும் சாதாரண டிவி சேனல்கள் என இரண்டுக்கும் இந்த ஆஃபர் கிடைக்கும்.
ALSO READ | ஒருமுறை சார்ஜ் 180 கிமீ தூரம் பயணம்! வெறும் ரூ.999 செலுத்தி புதிய பைக்...
Tata Play Binge மூலம் வாடிக்கையாளர்கள் 13 ஓடிடி சேனல்களை கண்டுகளிக்கலாம். அவற்றுக்கான கட்டணத்தைப் பொறுத்தவரை ஒற்றைக் கட்டணம் மற்றும் காம்போபேக் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. ஆனால், எந்த விலையில் ஓடிடி சேனல்களை வழங்க உள்ளது என்ற விலைப்பட்டியலை இதுவரை அறிவிக்காத டாடா பிளே, புதிய விலைப்பட்டியல் நிச்சயம் வாடிக்கையாளர்கள் விரும்பும் விலையில் இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.
ALSO READ | Tiago Vs WagonR Vs Santro CNG: உங்களுக்கான சிறந்த கார் எது? முழு ஒப்பீடு இதோ
டாடா ப்ளே லிமிடெட் நிர்வாக இயக்குநர் நாக்பால் பேசும்போது, டாடா ஸ்கை நிறுவனத்துடன் நெட்பிளிக்ஸ் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், டிடிஹெச் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த அவர்களை மனதார வரவேற்பதாகவும் தெரிவித்தார். டாடா ப்ளேவில் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால், கூடுதல் கட்டணங்கள் ஏதும் இன்றி ஓடிடி தளங்களை பார்க்கும் வகையிலான காம்போ பேக்கள் இருக்கும் எனத் தெரிவித்த அவர், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய அடையாளத்துடன் டாடா பிளே களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பெயரையும் Tata Play Fiber என அந்த நிறுவனம் மாற்றியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR