டாடா மோட்டார்ஸ் நீண்ட காலமாக டாடா நெக்ஸான் எலக்டிரிக் காரின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. 
இப்போது இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் வெளியீட்டு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி இந்தக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அண்மையில் லீக்கான தகவல்களின் அடிப்படையில், புதிய எலக்டிரிக் கார் 136PS மின்சார மோட்டாரைக் கொண்டிருக்கும். இந்த மோட்டார் 7PS அதிக சக்தி வாய்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாருதி கார் வாங்க திட்டம் இருந்தால் முந்துங்கள்: விலை உயர்வு விரைவில்


Nexon EV பேட்டரி


Nexon EV இப்போது 40 kW-r பேட்டரி பேக்கைப் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.  அண்மையில் இந்த கார் புனேவில் சோதனை செய்யப்பட்ட போது,  இரட்டை பீம் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய LED DRL-களுடன் காணப்பட்டது. இது தவிர, எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு புதிய தோற்றத்தை அளிக்க, நிறுவனம் 16 இன்ச் டூயல்-டோன் டைமண்ட்-கட் அலாய் வீல்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என டாடா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.



Naxon EV ஆட்டோ ஹெட்லேம்ப்கள்


தற்போதைய மாடலில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய எஸ்யூவினா டாடா நெக்ஸான் எஸ்யூவி எலக்டிரிக் காரில் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பை பொறுத்த வரையில், முன்பக்கத்தில் இரண்டு ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை ஓட்ட முடியும். இந்த பவர்டிரெய்ன் 125 பிஎச்பி பவரையும், 245 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. விலை உள்ளிட்ட தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. 


மேலும் படிக்க | அட்டகாசமான புதிய Yamaha MT15க்கான முன்பதிவுகள் ஆரம்பம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR