சைபர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்: தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்று ஹேக்கர்கள் மக்களின் தனிப்பட்ட தரவுகளை ஹேக் செய்ய பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஸ்பைவேர் மற்றும் பல்வேறு வகையான தீம்பொருள்கள் மூலம் உங்களின் தனிப்பட்ட தரவை கசிய வைக்க முயற்சித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் விழிப்புணர்வே உங்கள் இணைய பாதுகாப்பின் முதல் உத்தரவாதம். நீங்கள் விரும்பினால் எந்த வகையான வைரஸ் அல்லது ஸ்பைவேர் பயன்பாடும் உங்கள் தொலைபேசியில் வராமல் தவிர்க்கலாம். 


இந்த பதிவில், ஸ்மாட்போன் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியமான விஷயங்களைப் பற்றி காணலாம். பின்வரும் விஷயங்களை நீங்கள் கவனித்தில் கொண்டால், உங்கள் தொலைபேசியில் மால்வேர் தாக்குதல், ஸ்பைவேர் ஆப் அல்லது ஏதேனும் வைரஸால் வரும் அபாயம் ஆகியவை வெகுவாகக் குறையும். அவற்றைப் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


- பல சமயங்களில், நாம் ஏதேனும் நம்பத்தகாத அல்லது திருட்டு வலைத்தளங்களையும் பார்வையிடுவதுண்டு. அந்த நேரத்தில், மொபைலில் வைரஸ் அல்லது ஏதேனும் ஸ்பைவேர் செயலி நிறுவப்படும் வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. நம்பத்தகாத இணையதளங்களை நீங்கள் பார்க்கவே கூடாது.


மேலும் படிக்க | Infinix Note 11s: நம்ப முடியாத தள்ளுபடி, முந்துங்கள் 


- நீங்கள் தெரியாத இணைப்பைக் கிளிக் செய்தால், அந்த இணைப்பைப் பார்வையிட்ட பிறகு, அங்கிருந்து எந்த வகையான கோப்பையும் பதிவிறக்க வேண்டாம். இப்படிச் செய்தால் உங்கள் போனில் வைரஸ் வரலாம். இது தவிர, உங்கள் தனிப்பட்ட தரவுகளும் கசியலாம்.


- பெரும்பாலும் இலவச இணையத்தின் பேராசையில் நம்மில் பெரும்பாலோர் நம் போனை தெரியாத வை-ஃபை இணைப்புகளுடன் இணைக்கிறோம். நீங்களும் இந்த தவறைச் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதை செய்யாமல் தவிர்ப்பது நல்லது.


- சில நேரங்களில் பொது அல்லது இலவச வைஃபை கரப்ட் ஆகி இருக்கும். அவற்றுடன் போனை இணைத்தால்,  ஸ்மார்ட்போன் வைரஸால் பாதிக்கப்படலாம். அப்படி நடந்தால், நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகையால் முடிந்த வரை, உங்கள் தொலைபேசியை தெரியாத அல்லது இலவச வைஃபையுடன் இணைக்க வேண்டாம்.


- அதிகாரப்பூர்வ கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். எந்தவொரு மூன்றாம் தரப்பு இணைப்பு (தர்ட் பார்டி லிங்க்) அல்லது பயன்பாட்டிலிருந்து உங்கள் ஃபோன் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டாம். இப்படி செய்தால், உங்கள் தொலைபேசியில் வைரஸ் வந்து உங்கள் தனியுரிமை மீறப்படலாம். 


மேலும் படிக்க | சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR