பாஸ்ட் சார்ஜிங் யூஸ் பண்ணறீங்களா... இந்த தவறுகள் போனை காலி செய்து விடும்
Pros & Cons of Fast Charging: எலக்ட்ரானிக் சாதனங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. அதில் ஒன்று பாஸ்ட் சார்ஜ். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் மின்னோட்டத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.
Pros and Cons of Fast Charging: ஸ்மார்ட்போன் என்பது, தொலைத் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது நமது வாழ்க்கையுடன் பின்னி பிணைந்த இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல அன்றாட வேலைகளுக்கு தேவையான ஒரு முக்கிய பொருளாக இருப்பதால், அது சரியான நிலையில் பராமரிப்பது அவசியம். இந்நிலையில், மிக வேகமாக சார்ஜ் செய்யும்
எலக்ட்ரானிக் சாதனங்கள் தொடர்பான ஒரு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது. அதில் ஒன்று பாஸ்ட் சார்ஜ். அதாவது, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற சாதனங்களின் பேட்டரிகளை விரைவாக சார்ஜ் செய்யும் சார்ஜிங் தொடர்பான தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் மின்னோட்டத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகும் வேகத்தை அதிகரிக்கிறது.
பாஸ்ட் சார்ஜிங்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சாதனங்களை குறைந்த நேரத்தில் மிக விரைவாக சார்ஜ் செய்யப்படுவதன் மூலம் நேரம் சேமிக்கப்படுகிறது. இது தவிர, அவசர நேரத்தில் போனை சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டும் நிலையில், சில நிமிடங்களில் ஸ்மார்ட்போன் (Smartphone) முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். தொழில்நுட்ப பிராண்டுகள் தங்கள் தொலைபேசிகள், டேப்லெட்டுகள் அல்லது மடிக்கணினிகளில் வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவை வழங்குவதற்கான காரணம் இதுதான்.
வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தினால், சில நிமிடங்களில் பெரிய அளவிலான பேட்டரியையும் விரைவாக சார்ஜ் செய்யலாம். ஆனால், அதில் சில குறைபாடுகளும் உள்ளன.
1. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
வேகமாக சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சார்ஜர் பயன்படுத்தப்படாவிட்டால், பேட்டரி சேதமடையும் அபாயம் அதிகரிக்கிறது. தொலைபேசியை சார்ஜ் செய்ய ஒரிஜினல் சார்ஜர் அல்லாமல், டூப்ளிகேட் சார்ஜரையோ அல்லது வேறு விதமான சார்ஜரையோ பயன்படுத்தினால் ஆபத்து. உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த அசல் சார்ஜரை எப்போதும் பயன்படுத்தவும். டூப்ளிகேட் சார்ஜரால் பாஸ்ட் சார்ஜ் செய்யும் பேட்டரி வெடித்தல் அல்லது தீப்பிடித்தல் போன்றவை நிகழலாம்.
2. பேட்டரி ஆயுளை பாதிக்கிறது
பாஸ்ட் சார்ஜ் செய்வதை தொடர்ந்து பயன்படுத்தினால், அது பேட்டரி ஆயுளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பமான வெப்பநிலையில் பாஸ்ட் சார்ஜ் செய்வது பேட்டரி செல்களை சேதப்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளைக் குறைக்கும்.
பாதுகாப்பான வேகமான சார்ஜிங்கிற்கு நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை
நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், பாஸ்ட் சார்ஜ் செய்வதை பாதுகாப்பானதாக மாற்றலாம். முதலில், நீங்கள் அசல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் கேபிளைப் பயன்படுத்த வேண்டும். இது தவிர, தொலைபேசியை அதிகமாக சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும், சார்ஜ் செய்த பிறகு கேபிளில் இருந்து துண்டிக்கவும். சாதனம் வெப்பமடைந்தால், பாஸ்ட் சார்ஜ் செய்வதை நிறுத்துங்கள்.
மேலும் படிக்க | புத்தாண்டில் மொபைல் போன் வாங்க பிளானா... உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ