போன் ஸ்டோரேஜ் அடிக்கடி நிரம்பி விடுகிறதா... எதையும் நீக்காமலேயே சிக்கலை தீர்க்கலாம்
உங்கள் மொபைலின் சேமிப்பிடம் நிரம்பினால், சிறிய புதிய கோப்புகளையும், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சேமிப்பதில் கூட நீங்கள் சிக்கல்களைச் சந்திக்கக் கூடும்.
இன்றைய வேகமான மற்றும் டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கடந்த 80 -90களைப் போல தொலைபேசி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இல்லாமல், காலை கண் திறப்பது முதல் இரவு உறங்கும் வரை அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இன்றைய உலகில், ஒரு நபரின் வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன.
போனின் கேமராக்கள் அழகாகப் படம் பிடிக்கவும் பயன்படுகிறது. மொபைல் கேமரா மூலம் புகைப்படங்கள் க்ளிக் செய்யப்படுகின்றன அல்லது வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன, சமூக ஊடக செயலிகளும் தொலைபேசியில் கிடைக்கின்றன.பாடல்களைக் கேட்பது அல்லது பொழுதுபோக்கிற்காக திரைப்படங்களைப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் போன் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் பண பரிவர்த்தனைக்கும் போன் தேவை.
ஸ்மார்ட்போன்களில் உள்ள சேமிப்பகம்
மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் தேவையை நன்றாக புரிந்து வைத்துள்ளன. இப்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் குறைந்தது 64 ஜிபி அல்லது 128 ஜிபி சேமிப்பிடத்துடன் உள்ளன. 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன்களும் சந்தையில் கிடைத்தாலும் அவற்றின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. இப்போது எல்லாமே ஸ்மார்ட்போன்கள் தான் என்பதில் இருந்து பிரச்சனை தொடங்குகிறது. அதாவது, நீங்கள் 128 ஜிபி சேமிப்பகத்துடன் போனை எடுத்துச் சென்றாலும், மிக விரைவில் உங்கள் மொபைலில் உள்ள சேமிப்பகம் நிரம்பியுள்ளது. உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் பல்வேறு கோப்புகள், உங்கள் மொபைலில் நிறுவப்பட்டுள்ள பல செயலிகள் என அனைத்தும் சேர்ந்து அதிக சேமிப்பிடத்தை பயன்படுத்துகின்றன.
புதிய கோப்புகளைச் சேமிப்பதில் சிக்கல்
உங்கள் மொபைலின் சேமிப்பிடம் நிரம்பினால், சிறிய புதிய கோப்புகளையும், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சேமிப்பதில் கூட நீங்கள் சிக்கல்களைச் சந்திக்கக் கூடும். சில அழகான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அல்லது சில சமயங்களில் முக்கியமான கோப்புகளை நீக்க வேண்டிய கட்டாயத்திற்கு நீங்கள் தள்ளப்படலாம். எனவே, இந்த சிக்கலில் இருந்து விடுபட, இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு மிக எளிதான டிப்ஸை அறிந்து கொள்ளலாம். இதன் உதவியுடன் நீங்கள் எதையும் நீக்காமல் சேமிப்பிடத்தை அதிக அளவில் ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | Reliance Jio: ஜியோவின் அன்லிமிடெட் 5G டேட்டா... ஒரு வருடத்திற்கு ரூ. 601 மட்டுமே
அதிக சேமிப்பிடத்தை பயன்படுத்தும் செயலிகள்
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவிர, செயலிகளும் அதிக சேமிப்பிடத்தையும் பயன்படுத்துகின்றன.
அதிக எண்ணிக்கையில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில், நிறுவப்பட்ட எந்த ஒரு செயலியும் அதன் வழக்கமான அப்டேட்கள் மூலம் அதிக இடத்தைப் பயன்படுத்துகிறது, மேலும் உங்கள் சேமிப்பக இட நெருக்கடி சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. உண்மையில், உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்ட அனைத்து செயலிகளிலும், நாங்கள் அதிகம் பயன்படுத்தாத சில பசெயலிகள் நிச்சயம் இருக்கும்.
ஸ்மார்ட்போன்களில் இடத்தை மிச்சப்படுத்த உதவும் ஆட்டோ-ஆர்கைவ் அம்சம்
எனவே, இந்த சிக்கலை தீர்க்க, கூகுள் ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது. சில நேரங்களில் செயலிகளை நீக்குவது சாத்தியமில்லை என்பதால், இதுபோன்ற பயன்படுத்தப்படாத செயலிகளை முடக்கக்கூடிய அம்சத்தை வழங்குகிறது. இந்த செயல்முறையானது 'Automatically Archive Apps' என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, வழக்கமாகப் பயன்படுத்தப்படாத ஒவ்வொரு செயலியும் காப்பகப்படுத்தப்படும். இதன் மூலம் சேமிப்பக பிரச்சனை தீரும்.
ஸ்மார்ட்போனில் இடத்தை சேமிக்க Automatically Archive Apps அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரை திறக்கவும்...
2. பின்னர் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் ஐகானைக் கிளிக் செய்யவும்...
3. அதில் தோன்றும் விருப்பங்களிலிருந்து செட்டிங்கஸ் என்பதை தேர்ந்தெடுக்கவும்...
4. இப்போது மேலே உள்ள ஜெனரல் (General) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்…
5. இப்போது தோன்றும் பக்கத்தில் சிறிது கீழே சென்று Automatically Archive Apps என்பதை கண்டறியவும்...
6. ஆப்ஸை தானாக காப்பகப்படுத்துவதற்கான பட்டனை ஆன் செய்யவும்...
அவ்வளவுதான், இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆக்டிவேட் ஆகி விடும். இனி பயன்படுத்தப்படாத அனைத்து செயலிகள் எதையும் நீக்காமல் தானாகவே காப்பகப்படுத்தப்படும். உங்கள் மொபைலில் இடம் காலியாகி அதிக சேமிப்பகம் கிடைக்கும். உங்கள் மொபைலில் காப்பகப்படுத்தப்பட்ட செயலிகளின் பட்டியலையும் பார்க்கலாம், தேவைப்பட்டால், ஆப்ஸை காப்பகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து மீண்டும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | முடங்கிய இன்ஸ்டாகிராம்... தவிச்சு போன இளசுகள் - இந்த வாரத்தில் இது 2வது முறை...!!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ