எச்சரிக்கை..!! ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் செல்போன் சேவை துண்டிக்கப்படும்
ரூ.75-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் செல்போன் சேவை துண்டிக்கப்படும் என்ற விதி விரைவில் வர உள்ளது.
இனிமேல் இலவசமாக எதுவும் இல்லை. நீங்கள் தொலைபேசியை வைத்திருந்தால் குறைந்தபட்சம் 75 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தே ஆகவேண்டும். அதாவது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சி.எம்.டி., சுனில் மிட்டல் கூற்றுப்படி, தற்போது உலகிலேயே மிகக் குறைவானத கட்டணம் செல்போன்களுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். ஆனால் அவை படிப்படியாக அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விலை போரை நடத்தி வருகிறது. இதில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையளர்களை தக்க வைத்துகொள்ளவும், புதிய வாடிக்கையளர்களை ஈர்க்கவும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சாதகமான ஆதாயத்தை வழங்குவதற்கான விலைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது தான் கேள்வி?
தற்போது நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் திகழ்கிறது. ஏர்டெல் நிறுவனம் 41 கோடி 30 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுனில் பார்தி மிட்டல், டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார ஃபோரம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், 2019 முதல் தொலைத் தொடர்பு துறையில் மூன்று தகவல்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே வணிக செயல்பாட்டில் ஈடுபடும். நீங்கள் தொலைபேசி மற்றும் தகவல்தொடர்பு நெட்வொர்க்கை பயன்படுத்த சிறிது பணம் செலவழிக்க வேண்டியது முக்கியம் ஆகும். முதல் நீங்கள் 200 முதல் 250 ரூபாயிலிருந்து 800MB தரவுகளை மட்டும் பயன்படுத்தினீர்கள். இப்போது, 100 ரூபாய், 11 முதல் 12 ஜிபி வரை தரவுகளை பயன்படுத்துகிறீர்கள். அதாவது 10 முதல் 11 மடங்கு அதிகமான தரவு கிடைக்கிறது. எனவே விலை உயர்வு ஏற்ப்பட்டாலும், இந்தியாவில் தரவுகள் மலிவாக தான் இருக்கும் என்று அவர் கூறினார்.
வாடா-ஐடியா கூட குறைந்தபட்ச ரீசார்ஜ் குறித்து புதிய அறிவிப்பை வெளியிடலாம். தற்போது லைஃப் டைம் இலவசம் வழங்குவதில் எந்த நிறுவனமும் அக்கறை காட்டவில்லை. குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் செல்போன் சேவை துண்டிக்கப்படும் என்ற விதியில் தற்போது செலுத்தப்படும் விலையில் மாற்றம் செய்யப்படும். இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நெட்வொர்க்கைப் பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் செலவழிக்க வேண்டும் என்ற கட்டாய சூழல் ஏற்ப்படும்.