தெரியுமா!... இந்தியாவில் eSIM சேவையை அறிமுகம் செய்தது Vodafone...
தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியாவில் ஈசிம் (eSIM) அடிப்படையிலான செல்லுலார் சேவையைத் தொடங்கியுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியாவில் ஈசிம் (eSIM) அடிப்படையிலான செல்லுலார் சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்த சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆப்பிள் வாட்ச் (GPS+ செல்லுலார்) பயனர்கள் இப்போது மொபைல் நெட்வொர்க் மூலம் வோடபோன் eSIM மூலம் இணைக்க முடியும். முன்னதாக, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே இந்த eSIM சேவையை வழங்கி வந்தன.
ஜியோவை மிஞ்சிய வோடபோன்.. அதிரடி Double Data சலுகை - முழு விவரம்...
இந்நிலையில் தற்போது தொலைத்தொடர்பு ஆபரேட்டர் வோடபோன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்., பயனர்கள் வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டத்தை தங்கள் ஆப்பிள் வாட்ச் (GPS + செல்லுலார்) உடன் பகிர்ந்து கொள்ளலாம். வோடபோனின் நெட்வொர்க் மூலம் குரல் அழைப்பு மற்றும் தரவு பயன்பாட்டிற்காக பயனர்கள் இந்த ஆப்பிள் வாட்சைப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைத் தொடர்பு வட்ட பயனர்களுக்காக வோடபோன் தற்போது இந்த eSIM சேவையை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது, டெல்லி, மும்பை மற்றும் குஜராத் தொலைதொடர்பு வட்டார மக்கள் இந்த சேவையின் பயனைப் பெறுவார்கள். எனினும் இந்த சேவை தற்போது போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
WatchOS 6.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3-க்கு மேலே உள்ள அனைத்து ஸ்மார்ட்வாட்ச்களும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். ஆப்பிளின் சமீபத்திய வாட்ச் சீரிஸ் 5 ஆப்பிள் நிகழ்வு 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 (GPS) மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 (GPS+ செல்லுலார்) ஆகிய இரண்டு வகைகளுடன் வருகிறது.
நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா; BSNL வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்...
அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது ரெடினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில், நேரம் உட்பட பல முக்கியமான தகவல்களை நீங்கள் காணலாம். உள்ளமைக்கப்பட்ட திசைகாட்டி போன்ற இருப்பிட அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஐபோன் இல்லாத 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அவசர சேவைக்கு இதைப் பயன்படுத்த முடியும். இத்துடன் இது சைக்கிள் கண்காணிப்பு, இரைச்சல் பயன்பாடு மற்றும் செயல்பாட்டு போக்குகள் உள்ளிட்ட WatchOS 6 இயக்க முறைமை போன்ற புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.