Tesla Car In Bangalore: போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பெங்களூரு நகரில் டெஸ்லா நிறுவனத்தின் SUV காரான, X மாடல் கார் காணப்பட்டுள்ளது. பெங்களூருவில் காணப்பட்ட அந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அதுசார்ந்த இரண்டு புகைப்படங்கள் X தளத்தில் பகிரப்பட்டன.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்று போக்குவரத்து சிக்னலில் கார் நிறுத்தப்பட்டது, மற்றொன்று நகர்ந்துகொண்டிருக்கும் புகைப்படமாகும். இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்துவதற்கு இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்று இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் குஜராத்தில் ஒரு தொழிற்சாலையை தொடக்க இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் அவை உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


டெஸ்லா பெங்களூரு சாலைகளில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. X தளத்தில் நார்த் பெங்களூரு போஸ்ட் அதன்  பக்கத்தில், "மின்ஸ்க் சதுக்கம் #Tesla #India #Bengaluru #ElectricDrive" என்று அந்த கார் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த இடுகைக்கு ஏராளமான பயனர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் வாகனம் சோதனை ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினர். ஏனென்றால், துபாய் பதிவு எண் அதில் தென்பட்டது என்பதால்.


மேலும் படிக்க | டக்குனு போட்டோஸ் டெலீட் ஆகிவிட்டதா... ஈஸியாக மீட்டுக்கலாம் - வழிகள் இதோ!


"இது டெஸ்ட் டிரைவ் அல்ல, யாரோ ஒருவர் அவரின் வருகைக்காக துபாயில் இருந்து தனது காரை ஓட்டுகிறார். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் அனுமதிக்கப்படுகிறது" என்று ஒரு X பயனர் கமெண்ட் செய்துள்ளார். "அதன் பின்பக்கத்தில் துபாயில் பதிவுசெய்யப்பட்ட டெஸ்லா என தெரிகிறது. கேரளாவுக்கு வந்து பார்த்தால், இங்கு மிகவும் பொதுவானதாகும்" என்று மற்றொரு பயனர் கூறினார். மேலும் ஒரு பயனர், "துபாயில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியார் கார் போல் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.



அடுத்த மாதம் நடைபெற உள்ள 'வைப்ரண்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டின்' போது குஜராத்தில், டெஸ்லா எலக்ட்ரிக் வாகன (EV) சப்ளை சிஸ்டம் உற்பத்தி ஆலையை அமைப்பதாக எலான் மஸ்க் அறிவிக்கலாம் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில் டெஸ்லா சிஇஓ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 


டெஸ்லா தனது உற்பத்தி ஆலையை அமைக்க சனந்த், பெச்சராஜி மற்றும் தோலேரா ஆகிய இடங்களை குஜராத் மாநில அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் டெஸ்லா தனது EV ஆலையை அமைக்க பரிசீலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்தாண்டு அதிகமானோரால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ