ஜோசியம் சொல்லும் டாப் செயலிகள் 2022
அன்றாட ராசிகளின் கணிப்புகள் மற்றும் உங்களின் ஜாதகம் தொடர்பான சந்தேகங்களை துல்லியமாக காட்டும் டாப் செயலிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பழங்காலம் முதல் பல்வேறு கணிப்புகளைக் கொண்டு ஜாதங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், டெக் உலகில் அவை மிகவும் எளிமையாக்கப்பட்டுவிட்டன. யாரோ ஒருவரிடம் சென்று உங்களின் ஜாதக கணிப்புகளை தெரிந்து கொள்வதைக் காட்டிலும், உங்கள் வீட்டிலேயே, அதுவும் விரல் நுனியில் ஜாதகத்தின் கணிப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தி பேட்டர்ன் (The Pattern)
கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஜாதக செயலி தான் இது. ஜாதகம் குறித்து தெரியாதவர்கள் அல்லது தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து, அன்றாட கணிப்புகளையும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த ஜாதக கணிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.நட்சத்திர கணிப்பு, தேதி கணிப்பு உள்ளிட்ட விவரங்களும் இருக்கும்.
மேலும் படிக்க | துலா ராசியில் கேது: 2023 வரை இந்த ராசிகளுக்கு ராஜ யோகத்தை அளிப்பார்
சைனி (Chani)
இந்த செயலியில் ஜாதக கணிப்புகள் மட்டுமில்லாமல் தியானம், சடங்குகள் மற்றும் அந்தந்த ராசியினருக்கு ஏற்ப பரிகாரங்கள் உள்ளிட்டவைகளும் இருக்கும். எந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும்?, சனிப்பெயர்ச்சியில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றிருக்கும். ஜாதகக்கார்கள் கணித்துக் கொடுப்பதுபோலவே பல்வேறு பரிகாரங்களையும் இந்த செயலி மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அடிப்படை அம்சங்கள் இலவசம். மெம்பர்ஷிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
அஸ்டிராலஜி ஜோன் (Astrology Zone)
ஜோதிடங்களின் சங்கமம் இந்த செயலி. எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் மாதாந்திர பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஏற்ற செயலி. பணம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் தொழிலில் நடைபெறும் அதிர்ஷ்டம் மற்றும் ஆபத்துகளை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விழிப்பாக இருந்து உங்களுக்கு வர இருக்கும் ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். கருத்தில் கொள்ள வேண்டிய தேதிகளையும் முன்கூட்டியே இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம்.
ஆஸ்ட்ரோமேட்ரிக்ஸ்
10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலி. பல்வேறு அப்டேட்டுகளுடன் இருக்கும் இந்த செயலி உங்களின் ராசிப்பலன் குறித்த தகவல்களை துல்லியமாக வழங்கக்கூடியது. இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம் என்றாலும் சில பயன்பாடுகளுக்கு நீங்கள் கட்டாயம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். அடிப்படை விசயங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான்
ஆஸ்ட்ரோ கோல்டு
ஜோதிடம் குறித்து கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளவரா நீங்கள்?. அப்படியானால் இது மிகமிக சரியான செயலி. உங்கள் ராசிபலன்களை தெரிந்து கொள்ள உதவுவதுடன், உங்களை ஜோதிட பயிற்சியாளராகவும் மாற்றிவிடும். அதற்கான பயிற்சிகளும், வகுப்புகளும் இந்த செயலியில் இருக்கின்றன. தேர்வு மற்றும் வகுப்புகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் .
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR