தற்போது வாட்ஸ்அப் (Whatsapp messenger)பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக வாட்ஸ்அப் பல அப்டேட்டுகளை அதன் பயனாளர்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறது.  இந்நிலையில் பயனாளர்களை கவரும் நோக்கில் அசத்தலான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இந்த புதிய அம்சத்தின் மூலம்  மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் iOS பீட்டா பயனாளர்களுக்கு அனிமேஷன் செய்யப்பட்ட இதய எமோஜிகளை வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஐபோனில் டைப்-C சார்ஜரை பயன்படுத்த முடியுமா?


இந்த அனிமேஷன் செய்யப்பட்ட இதய ஈமோஜிகளை நாம் விரும்பும் பல்வேறு வண்ணங்களில் பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.  இவ்வாறு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் அனிமேஷன் இதய எமோஜிகளை பெறுபவர்களின் மொபைலிலும் இதே சிறப்பம்சம் இருந்தால் மட்டும் தான், எமோஜிகளை பெறுபவர்களால் அதனை பார்க்க முடியும் என்று வாட்ஸ்அப் டிராக்கர் WABetaInfo தெரிவித்து இருக்கிறது. 



மேலும் WABetaInfo கூறுகையில், "வாட்ஸ்அப் அனிமேஷன் எமோஜிகளை  iOS பீட்டா சோதனையாளர்களின் 2.22.72 பீட்டா அப்டேட்டில் தருகிறது.  வாட்ஸ்அப் இந்த சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் பீட்டா  பயனாளர்களுக்கு அளிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.  ஆனால் ஆண்ட்ராய்டில் இத்தகைய வசதிகளை அறிமுகப்படுத்தும் எவ்வித அறிவிப்பையும் தற்போது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.300க்குள் OPPO 5G ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR