iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி: Whatsapp பயன்பாட்டில் வந்தது பிரச்சனை

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மற்றும் பழைய மாடல்களிலும், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள், சமூக ஊடக அடிப்படையிலான தளங்களில் கிராஷிங் பக்கை எதிர்கொள்கின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 04:52 PM IST
  • பல ஐபோன் பயனர்களால், பிரபலமான செய்தியிடல் அடிப்படையிலான செயலியான வாட்ஸ்அப்பை இயக்க முடியவில்லை.
  • ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பை தொடங்க முயசிக்கும்போதெல்லாம், இந்த பிரச்சனை வருகிறது.
  • பீட்டா சோதனை உருவாக்கங்களும் இந்த செயலிழக்கும் சிக்கலை எதிர்கொள்கின்றன.
iPhone பயனர்களுக்கு அதிர்ச்சி: Whatsapp பயன்பாட்டில் வந்தது பிரச்சனை title=

பல ஐபோன் பயனர்களால், பிரபலமான செய்தியிடல் அடிப்படையிலான செயலியான வாட்ஸ்அப்பை இயக்க முடியவில்லை. தற்போது, ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மற்றும் பழைய மாடல்களிலும், உலகம் முழுவதும் உள்ள பயனர்கள், சமூக ஊடக அடிப்படையிலான தளங்களில் கிராஷிங் பக்கை எதிர்கொள்கின்றனர். 

ட்விட்டரில் பதிவிடப்பட்ட பல ட்வீட்களின்படி, பல ஐபோன் (iPhone) பயனர்கள் தங்கள் போனில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். அப்படி ஐபோனில் என்னதான் பிரச்சனை வந்தது என இந்த பதிவில் காணலாம். 

இந்த பிரச்சினை எப்போது வருகிறது?

ஐபோன் பயனர்கள் வாட்ஸ்அப்பை தொடங்க முயசிக்கும்போதெல்லாம், இந்த பிரச்சனை வருகிறது. இதனால் ஆப்பிள் (Apple) பயனர்களால், சேட்டை அணுகவோ, செய்திகளை அனுப்பவோ முடியவில்லை. சமீபத்தில், ஆப் ஸ்டோரில் புதிய வாட்ஸ்அப் அப்டேட் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 

வாட்ஸ்அப் அடிக்கடி செயலிழக்கிறது

சில அறியப்படாத காரணங்களால், பீட்டா சோதனை உருவாக்கங்களும் இந்த செயலிழக்கும் சிக்கலை எதிர்கொள்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது வாட்ஸ்அப்பை செயலியை விட பேஸ்புக் சேவையகங்களின் ஒரு சிக்கலாக இருக்கக்கூடும். அல்லது இயக்க முறைமை தொடர்பான பிழையாகவும் இருக்கலாம். எனினும், இதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவாகவே உள்ளது. 

எரிச்சலடைந்த பயனர்கள்

ட்விட்டரில் தங்கள் பிரச்சினைகளை எழுப்பியவர்களின் கருத்துப்படி, இந்த பிழை வழக்கமான மற்றும் வாட்ஸ்அப் வணிக பயன்பாடுகளையும் பாதிக்கிறது. விஷயங்களை மேலும் சிக்கலாக்கும் வகையில், இந்தச் சிக்கல் சமீபத்திய iOS 15.2 இயங்கும் மாடல்களையும், பழைய iOS பில்ட்களை இயக்கும் மற்ற மாடல்களையும் பாதிக்கிறது.

வாட்ஸ்அப் இன்னும் பதிலளிக்கவில்லை

துரதிர்ஷ்டவசமாக, இந்த சிக்கல்களுக்கு வாட்ஸ்அப் (Whatsapp) இன்னும் பதிலளிக்கவில்லை. வழக்கமாக, இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம், நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிடுவது வழக்கம். தற்போது, இந்த விஷயத்தில் நிறுவனம் என்ன பதில் கூறவுள்ளது என்பதை தெரிந்துகொள்ள பயனர்கள் ஆவலாக உள்ளனர். 

ALSO READ | Bumper Discount Offer! iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News