ஆண்ட்ராய்டு போனில் உங்கள் பணத்தை திருடும் 3 செயலிகள்
வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் புகாரில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 3 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரக்கணக்கான செயலிகள் இருந்தாலும், அவற்றை கவனமாக பயன்படுத்துவது அவசியம். தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலிகளின் பிரைவசி பாலிசியை கட்டாயம் படிக்க வேண்டும். இல்லையென்றால், உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிகள், அவற்றை வைத்து மோசடியையும் அரங்கேற்றுகின்றன. லேட்டஸ்டாக, வாடிக்கையாளர்கள் பதிவு செய்த புகார்களின் அடிப்படையில் 3 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
அந்த 3 செயலிகளும் பணத்தை திருடும் புகாரில் சிக்கியுள்ளன. அதாவது, ஜோக்கர் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அந்த செயலிகள் அனுமதிக்கிறதாம். ஜோக்கர் மால்வேர் என்பது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த தகவல்களை திருடக்கூடியது. இந்த புகாரில் சிக்கிய செயலிகள் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பிளட் பிரஷர் ஆப், ஸ்டைல் மெசேஜ் மற்றும் கேமரா பிடிஎப் ஸ்கேனர் ஆகிய செயலிகள் இந்த புகாரில் சிக்கி, கூகுள் பிளே ஸ்டோர் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும்
நீங்கள் ஒருமுறை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால்போதும், ஜோக்கர் மால்வேர் உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும். இண்டர்நெட் கனெக்ஷன் இருக்கும் நேரங்களிலும் ஜோக்கர் ஆக்டிவேட்டாகிவிடுமாம். அந்த நேரத்தில் மால்வேர் ஆக்டிவேட்டாகி சில கவர்ச்சிகரமான கேம்களை காட்டுமாம். அதனை கிளிக் செய்தால் அல்லது சப்ஸ்கிரிப்சன் செய்தால் பணத்தை திருடும் செயல்பாடுகளை தொடங்கிவிடுமாம்.
இது குறித்த அப்டேட்டுகள் கிடைத்தவுடன், அதாவது செயலிகளின் நடவடிக்கை குறித்த தகவல் கிடைத்தவுடன் உண்மைத் தன்மையை ஆராய்ந்த கூகுள் நிறுவனம், 3 செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கூகுளின் பாதுகாப்பு செட்டிங்ஸூகளை இந்த செயலிகள் பைபாஸ் செய்துவிடக்கூடியதாகவும் இருந்துள்ளது. மேலும், பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் அடிக்கடி சப்ஸ்கிரிப்சன் செய்யுமாறு நோடிபிகேஷன் அனுப்பிக் கொண்டே இருக்குமாம். இவைதவிர மெசேஜ் மற்றும் மீடியா தகவல்களை அணுகுவதற்கான அனுமதியை கேட்டுக் கொண்டே இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க | அமேசான் அதிரடி: ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR