பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு பயப்படாமல் வாங்குவதற்காக மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார ஆட்டோ ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மஹிந்திரா TREO ஆட்டோ ரிக்ஷா குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்டும் திறன் கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹிந்திரா TREO ரேஞ்சிலும் சிறந்தது. முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணம் செல்ல முடியும். 141 கிமீ வரை சென்றதற்கான பதிவும் உள்ளது. இந்த ஆட்டோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 55 கிலோமீட்டர். 0-20 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் எட்டிவிடும் ட்ரீயோ ஆட்டோ, வெறும் 3 மணிநேரம் 50 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்யலாம். 15 ஆம்ப் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம்


வீல் பேஸ் 2073 மிமீ. கொண்ட இந்த மின்சார ஆட்டோவில் போதுமான இடவசதி உள்ளது, அதில்  பயணிக்கும்போது எந்த பிரச்சனையும் ஏற்படாது.இது மஹிந்திராவின் குறைந்த பராமரிப்பு லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட மூன்று சக்கர வாகனமாகும். ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


ALSO READ | Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி: முக்கிய தகவல்


ஆண்டுக்கு ₹45000 சேமிப்பு


மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த ஆட்டோ ரிக்ஷா (Electric vehicle e-auto) ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 50 பைசா செலவில் இயங்குகிறது. எரிபொருள் செலவில் ஆண்டுக்கு ரூ.45,000 வரை சேமிக்க முடியும். இதில் டிரைவர்+3 இருக்கை வசதி உள்ளது. இதில் ஸ்மார்ட் லித்தியம்-அயன் தொழில்நுட்பம் கொண்ட பேட்டரி உள்ளது.


36 மாத உத்தரவாதத்தைப் பெறுகிறது


நீங்கள் இந்த ஆட்டோவை வாங்கினால், நிறுவனத்திடமிருந்து 36 மாதங்கள் அல்லது 80,000 கிமீ (எது முதலிலோ அது செல்லுபடியாகும்) வரை உத்தரவாதத்தைப் பெறுவீர்கள். இந்த ஆட்டோ நான்கு வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது.


READ ALSO | டெஸ்லாவின் இந்திய வருகை: நிதி அயோக் தலைவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR