Tesla: டெஸ்லாவின் இந்திய வருகை பற்றி நிதி அயோக் தலைவர் சொல்வது என்ன?

அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் நுழைவதற்கு முன்பு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 02:53 PM IST
  • டெஸ்லா எப்போது இந்தியாவுக்கு வருகிறது
  • இந்திய சந்தையில் டெஸ்லாவின் வருகை பலத்த போட்டியை உருவாக்கும்
  • டெஸ்லாவுக்கு மூன்றாண்டுகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுமா?
Tesla: டெஸ்லாவின் இந்திய வருகை பற்றி நிதி அயோக் தலைவர் சொல்வது என்ன? title=

புதுடெல்லி: அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் நுழைவதற்கு முன்பு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். டெஸ்லாவின் திட்டம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறிய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், இது தொடர்பாக சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் டெஸ்லாவின் நுழைவு குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன, மேலும் இந்த புகழ்பெற்ற பிராண்டின் சக்திவாய்ந்த மின்சார கார்களை (Electric Car) வாங்குவதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமும் அதிகரித்ள்ளது. 

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இறக்குமதி வரியை (Import Duty) குறைக்க இந்திய அரசிடம் முன்மொழிந்திருந்தாலும், அதை அரசு மதிப்பிட்டு வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் (CEO of NITI Aayog) தெரிவித்தார். இந்த திட்டத்தை அரசு ஆய்வு செய்து வருகிறது என்றார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையால் எடுக்கப்படும்.

READ ALSO | யூடியூப் வீடியோக்கள் அனைத்திலும் லிசனிங் கன்ட்ரோல்!

இறக்குமதி வரியை தற்காலிகமாக குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது
நிதி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள தகவலில், இந்திய அரசு டெஸ்லா கார்களை நாட்டில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்தார். சுங்க வரி குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதை விட, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரிப்பது சிறந்தது என்று கனரக தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. 

இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் கூறுகையில், தற்போது தங்கள் கார்களை கிட் மூலம் அசெம்பிள் செய்ய முடியாது. இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறது. எனவே, சுமார் 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரியை தற்காலிகமாக குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், டெஸ்லா முதலில் வணிகத் திட்டத்தை முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் டெஸ்லாவின் வருகை மின்சார வாகனத் துறையில் போட்டி அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு என்பது, உள்நாட்டு எலெக்ட்ரிக் (Electric Vehicles) வாகன வர்த்தகத்தை பாதிக்கும் என்று இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சில காலத்திற்கு முன்பு அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தனர். 

tesla

இருப்பினும், டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருவதால், எலக்ட்ரிக் வாகனத் துறையில் போட்டி அதிகரித்து, இந்தியாவிலும் அந்த நிறுவனம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சில காலத்திற்கு முன்பு டெஸ்லா நிறுவனம் (Tesla India) இந்தியா வருவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியது.

மேலும், அதன் இந்திய தலைமையகம் மற்றும் உற்பத்தி ஆலை பெங்களூரில் அமைக்கப்படும் என்பதும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும்விதமாக, இந்தியாவில் பெரிய அதிகாரிகளை நியமித்துள்ளது என்பது போன்ற செய்திகளும் வெளிவந்தன.

தற்போது, ​​டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்ஜி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்து வருகின்றன, இந்த நிலையில், டெஸ்லாவின் இந்திய வருகை சந்தையில் போட்டியை அதிகரிக்கும்.

ALSO READ | மின்சார வாகனம் வாங்கினால் 3 லட்ச ரூபாய் மானியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News