கூகிள் தேஜ் பேமெண்ட் பயன்படுத்துவது எப்படி!
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு டிஜிட்டல் பண பரிமாற்றத்தை அதிகரித்து வருகிறது. அந்த நிலையில் யூபிஐ அடிப்படையில் கூகிள் தேஜ் என்ற பேமெண்ட் செயலியை மத்திய நிதியமைச்சர் அருன் ஜேட்லி அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் பேமெண்ட் சார்ந்த தேவைகளுக்கு நேசனல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய யூபிஐ செயலியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கூகிள் தேஜ் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் வளர்ந்து வருகின்ற டிஜிட்டல் சார்ந்த தேவைகளுக்கான பண பரிமாற்றத்தில் பங்கு பெறும் வகையில் யூபிஐ அடிப்படையில் தேஜ் என்ற பேமெண்ட சார்ந்த செயலியை வெளியிட்டு உள்ளது.
இது மற்ற பேமெண்ட செயிலிகளை விட மிக வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கூகுள் தேஜ் எப்படி பயன்படுத்துவது போன்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்:-
யூபிஐ உதவியுடன் வங்கி கணக்கை தேஜ் செயலியில் இணைப்பதன் மூலம் உடனடியாக, நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பலாம்.
கூகுள் நிறுவனத்தின் 24 மணி நேரப் பல அடுக்குப் பாதுகாப்பு போன்றவை தேஜ் செயலிக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பயம் இல்லாமல் சிறிய மற்றும் பெரிய தொகை என்று பாராமல் பணம் அனுப்பலாம்.
அருகில் உள்ள நண்பர்களின் மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்கள் ஏதும் இல்லாமல் பகிர்தல் சேவை மூலமாகவும் பணத்தினைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் செலுத்துவது மற்றும் போன் பில் மற்றும் டிடிஎச் கட்டணம் போன்றவற்றை செலுத்த கூடிய சேவைகளை விரைவில் அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த செயலி தமிழ் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கனடா, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.
இதை பயன்படுத்த ஆண்டிராய்டு போன், இந்தியாவில் ஏதேனும் வங்கிகளில் கணக்கு, இந்திய மொபைல் எண் உள்ளிட்டவை தேவை ஆகும்.
தேஜ் செயலியின் ஸ்காட்ச் கார்டு வழியாகச் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1,000 ரூபாய் வரை பணத்தினை வெல்ல முடியும். இதுவே ஞயிற்றுக் கிழமைகள் என்றால் 1 லட்சம் ரூபாய் வரை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.