சொகுசு விமானத்தில் மலிவான கட்டணத்தில் தனியா பறக்கனுமா? சுலபமான டிப்ஸ்!
Cheap Cost Luxury Flying : சிறிய ஆனால் நல்ல பலன் கொடுக்கக்கூடிய உதவிக் குறிப்புகளைப் பயன்படுத்தி, தனியார் ஜெட் விமானத்தில் சொகுசாக பயணிக்கலாம்...
பிரைவேட் ஜெட் புக்கிங்: இந்தியாவில் தனியார் விமானங்களுக்கான முன்பதிவு செய்ய சில உதவிக் குறிப்புகளை பயன்படுத்தினால், குறைந்த விலையில் சொகுசான ஆடம்பரமான பயண அனுபவத்தை அனுபவிக்கலாம்.
விமானத்தில் பயணம் செய்வது பலரின் கனவாக இருக்கலாம். உண்மையில், தனியார் ஜெட் விமானத்தில் பயணம் செய்வது சமூகத்தில் பெரிய அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் பயணத்துக்கான செலவு லட்சக்கணக்கில் இருக்கும். தனியார் ஜெட் விமானத்திலும் பயணம் சாமனியனுக்கு ஆசை வரக்கூடாதா என்ன? ஆசை இருந்தால், இந்த உதவிக் குறிப்புகளுடன் முயற்சித்துப் பாருங்கள். நல்ல தரமான அனுபவத்தை எதிர்பார்த்ததைவிட குறைவான செலவில் அனுபவிக்கலாம்.
காலியான விமானங்களை பதிவு செய்யவும்:
இந்தியாவில் உள்ள தனியார் ஜெட் நிறுவனங்கள் "Empty Leg" விமானங்களை வழங்குகின்றன. ஒரு வழி பயணத்திற்குப் பிறகு காலியாகத் திரும்பும் விமானங்களுக்கு விமான நிறுவனங்கள் தள்ளுபடி வழங்குகின்றன. இந்தியாவில் JetSetGo, BookMyJet, JetSmart போன்ற நிறுவனங்கள் தனி விமான சேவையை வழங்குகின்றன.
கடைசி நிமிட புக்கிங்
உங்கள் பயணத் தேதிகள் சிறிது மாற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்தால், கடைசி நிமிடத்தில் விலை குறைவாக இருக்கும். தனியார் ஜெட் நிறுவனங்கள் பெரும்பாலும் மீதமுள்ள இருக்கைகளை மலிவாக விற்கின்றன. இதற்கு ஃப்ளை பிளேட் இந்தியா மற்றும் ஜெட்செட்கோ போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம்.
விமானம் பகிர்வு
இந்தியாவில் சில நிறுவனங்கள் ஜெட் பகிர்வுக்கான விருப்பத்தையும் வழங்குகின்றன, இதில் ஜெட் விமானத்தை மற்ற பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம், இது உங்கள் செலவுகளைக் குறைக்கும். JetSetGo மற்றும் BookMyJet ஆகியவை ஒரே ஜெட் விமானத்தில் மற்ற பயணிகளுடன் நீங்கள் பயணிக்கக்கூடிய சேவைகளை வழங்குகின்றன.
உறுப்பினர் திட்டங்கள்
அடிக்கடி பயணம் செய்பவர்கள், ஒரு நிறுவனத்தின் தொடர் வாடிக்கையாளராக இருக்கு போது, சில சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும். JetSetGo மற்றும் Club One Air போன்ற நிறுவனங்கள் உறுப்பினர் திட்டங்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன.
பயணத் திட்டங்கள்
உங்கள் பயணத்தின் தேதி மற்றும் நேரம் நெகிழ்வாக இருந்தால், விலை குறைவான ஆஃபர்கள் கிடைக்கும். இதன் மூலம் குறைந்த விலையில் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.
நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்
சில நேரங்களில் நீங்கள் தனியார் ஜெட் நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் சிறப்புத் தள்ளுபடிகளைப் பெறலாம். குறிப்பாக குழுவாக பயணம் செய்தால், நேரடியாக நிறுவனங்களை தொடர்பு கொள்வதால் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை சொகுசாக மேற்கொள்ளலாம். Air Charter Service India மற்றும் BookMyJet போன்ற நிறுவனங்கள் நல்ல தள்ளுபடி வழங்குகின்றன.
கூட்டுப் பயணம்
நண்பர்கள் அல்லது வணிக கூட்டாளிகளுடன் கூட்டுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யலாம். இது பயணத்தின் மொத்த செலவை குறைத்துவிடும் என்பதுடன் அனைவரும் ஆடம்பர அனுபவத்தைப் பெற முடியும். இதுபோன்ற சிறிய ஆனால் நல்ல பலன் கொடுக்கக்கூடிய உதவிக் குறிப்புகளைப் பயன்படுத்தி, தனியார் ஜெட் விமானத்தில் சொகுசாக பயணிக்கலாம்.
மேலும் படிக்க | Amazon சேல் முடிஞ்சா என்ன? குறைந்த விலையில் பொருட்கள் கொடுக்கும் அமேசான் சலுகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ