IAS முதல் போட்டோகிராஃபி வரை ஆன்லைனில் கல்வி கற்க சிறந்த 5 செயலிகள்
ஆன்லைன் மூலம் கல்வி கற்க உதவும் சிறந்த 5 செயலிகளை தெரிந்து கொள்வோம்.
கொரோனா வைரஸூக்குப் பிறகு மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கல்வியில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதனால், குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை என அனைவரும் ஆன்லைன் மூலம் கல்விக்கு தயாராகிவிட்டனர். ஆனால், எந்த செயலியில் படிப்பது என்பது மட்டும் மாணவர்களுக்கு பெரும் குழப்பமாக உள்ளது.
ஏனென்றால், கொரோனா வைரஸூக்குப் பிறகு ஏற்பட்ட ஆன்லைன் மார்க்கெட்டை பயன்படுத்தி பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியைக் கொடுக்க அரம்பித்துவிட்டன. புதிய செயலிகளை உருவாக்கி அதில் எல்கேஜி முதல் ஐஏஎஸ் தேர்வுகள் வரை அனைத்து பாடங்களையும் ஆன்லைன் ஆசிரியர் மூலம் நடத்த தொடங்விட்டனர். வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்றுக் கொள்ளும் முறை மாணவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில், ஆன்லைன் மூலம் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் பிரலமான 5 செயலிகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
அன்-அகாடமி லர்னர் ஆப்
(Unacademy Learner app)
ஐஐடி, ஜேஇஇ, நீட்-யுஜி, கேட், எஸ்எஸ்சி தேர்வுகள், மாநில பிஎஸ்சிகள், பிற போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ வகுப்பு 6-12 தயாரிப்புகளுக்கு அன் அகாடமி செயலி சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு மாணவர்களுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைக்கின்றனர். சிறந்த பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள்
BYJU'S-The Learning app
4 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் BYJU-ன் நேரடி ஆன்லைன் வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தேகங்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு, வரம்பற்ற பயிற்சி அமர்வுகளும் இங்கு கிடைக்கும். பள்ளி மாணவர்களுக்கான கல்வியை வீட்டில் இருந்தபடியே பைஜூஸ் செயலியில் கற்றுக் கொள்ள முடியும்.
கான் அகாடமி
(Khan Academy)
கான் அகாடமி என்பது வகுப்பு 1 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கான இலவச கல்வியைக் கொடுக்கும் செயலி. இது கணிதம்-அறிவியல் போன்ற பாடங்களுக்கான வீடியோக்கள், பயிற்சிகள் மற்றும் அறிவியல் செயல்முறை சோதனைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் மற்றும் பல பிராந்திய மொழிகளில் கான் அகாடமி பயிற்சி வீடியோக்கள் கிடைக்கும்.
உடெமி: ஆன்லைன் வீடியோ படிப்புகள் & வகுப்புகள்
(Udemy: Online video courses & classes)
Udemy செயலியில் உள்ள ஆன்லைன் படிப்புகள் அனைத்து பிரிவினருக்குமானது. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஆன்லைன் வீடியோ படிப்புகளை இங்கே காணலாம். இங்கே பயனர்கள் கோடிங், ஜாவா, பிசினஸ், மார்க்கெட்டிங், எஸ்சிஓ, எஸ்இஎம் மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற படிப்புகளைப் படிக்கலாம்.
கோர்செரா
(Coursera)
இந்த செயலி மூலம் 200 சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை யூசர்கள் அணுகலாம். குறைந்த மற்றும் மலிவான விலையில் கல்வி கற்க விரும்புபவர்கள், எந்த நிலைக்குமான திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடிய அம்சங்கள் இதில் இருக்கிறது. இலவச படிப்புகள், பல்கலைக்கழக சான்றிதழ்கள் மற்றும் வேலை பயிற்சி சான்றிதழ்கள் அனைத்தும் Coursera-வில் கிடைக்கும்.
மேலும் படிக்க | கூகுள் பே-வில் UPI ஐடியை மாற்றுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ