ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள்

40 ஆயிரத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் இப்போது வாங்கக்கூடிய டாப் 5 லேப்டாப்கள்   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 13, 2022, 06:08 PM IST
  • இப்போது வாங்கக்கூடிய லேப்டாப்கள்
  • டாப் 5 பெஸ்ட் லேப்டாப்கள் இங்கே
  • ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்
ரூ.40 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கும் டாப் 5 லேப்டாப்கள் title=

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் வீட்டு உபயோகத்திற்கு கணினிக்குப் பதிலாக லேப்டாப்பைப் பயன்படுத்த விரும்புகின்றனர். படிப்பு முதல் அலுவலக வேலைக்கு வரை அனைத்திற்கும் மடிக்கணினிகள் பயன்படுவதால், மக்கள் இதை வாங்க அதிகம் ஆசைப்படுகின்றனர். மேலும், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கிறது. 

புதியதாக, அதுவும் 40 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்கும் பிளானில் நீங்கள் இருந்தால், உங்களுக்கான சாய்ஸாக இந்த லேப்டாப்களை தேர்ந்தெடுக்கலாம். 

ASUS VivoBook 15

இந்த லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.25,990. 15.6-இன்ச் HD+ (768x1366 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 220-நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 8ஜிபி வரை ரேம், இன்டெல் செலரான் என்4020 ப்ராசசர், 256ஜிபி சேமிப்பு, விண்டோஸ் 11 மற்றும் 6 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Infinix இன்புக் X1

இந்த லேப்டாப்பை வாடிக்கையாளர்கள் ரூ.34,499-க்கு வாங்கலாம். இது 14-இன்ச் முழு-எச்டி (1080x1920 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 300-நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 10-ஜென் இன்டெல் கோர் ஐ3 செயலி, 8ஜிபி ரேம், விண்டோஸ் 11 ஹோம் மற்றும் 4 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் பம்பர் தள்ளுபடி

லெனோவா ஐடியாபேட் 3

இந்த லேப்டாப்பை ரூ.35,290-க்கு சந்தையில் வாங்கலாம். 14-இன்ச் முழு-எச்டி (1080x1920 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 220-நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 11வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ3 ப்ராசசர், 16ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை சேமிப்பு, விண்டோஸ் 11 மற்றும் 7 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகியவற்றைப் பெறுகிறது. .

ஹெச்பி 14 எஸ்

40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் லேப்டாப் வாங்க விரும்புவர்களுக்கு ஹெச்பி14 எஸ் சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.36,990-க்கு வாங்கலாம். 14-இன்ச் முழு-எச்டி (1080x1920 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளே, 250-நிட்ஸ் பிரகாசம், 11வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 செயலி, 16ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை சேமிப்பு, விண்டோஸ் 11 மற்றும் 9 மணிநேர பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஏசர் ஆஸ்பியர் 3

இந்த லேப்டாப்பை சந்தையில் இருந்து ரூ.38,490-க்கு வாங்கலாம். 15.6-இன்ச் முழு-எச்டி (1080x1920 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவுடன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 11வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 செயலி, 12 ஜிபி வரை ரேம், 512 ஜிபி SSD சேமிப்பு மற்றும் விண்டோஸ் 11 உடன் வருகிறது.

மேலும் படிக்க | Nothing Phone (1) vs OnePlus Nord 2T 5G 5G: பெஸ்ட் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News