டூ வீலர் பைக்குகள் என்றாலே வாகன ஓட்டிகள்125 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளை அதிகம் விரும்புகிறார்கள். விலையும் குறைவாக இருக்கும், நல்ல மைலேஜ் தரும் என்ற காரணத்திற்காக இந்த மாடல் பைக்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் இப்போது விற்பனையில் மைலேஜ் மற்றும் ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கும் 125சிசி பைக்குகளில் இருக்கும் டாப் 5 பைக்குகளை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஜாஜ் CT125X 


இந்த பிரிவில் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற பைக் ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ.74,016 மற்றும் ரூ.77,216 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). டிஸ்க் பிரேக் மாடல் கொண்ட பைக் கொஞ்சம் விலை அதிகம். பஜாஜ் CT125X ஆனது ஒரு சிலிண்டர் 124.4cc இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 10.7bhp ஆற்றலையும் 11Nm இன் உச்ச முறுக்குவிசையையும் உருவாக்கக்கூடியது. இந்த எஞ்சினுடன் 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 61.3 கிலோமீட்டர் கொடுக்கும்.


மேலும் படிக்க | நமது வீட்டில் உள்ள பிரிஜ்ட்ஜை சுத்தம் செய்வது எப்படி? எளிதான வழிகள் இதோ!


ஹோண்டா ஷைன் 125


ஹோண்டா ஷைன் 125 சிசி பிரிவில் முன்னணியில் உள்ளது. இது இரண்டு மாடல்களில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும். டிரம் பிரேக் மாடல் ஆரம்ப விலை ரூ.79,800. டிஸ்க் மாடலின் விலை ரூ.83,800. இந்த இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி விலை. ஹோண்டா ஷைன் 123.94சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 10.59 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர்


Hero Super Splendor ஆனது கடந்த பல ஆண்டுகளாக சந்தையில் முன்னணியில் இருக்கும் ஒரு பைக். ரூ.80,848 மற்றும் ரூ.84,748 என இரு விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. டிஸ்க் பிரேக் இருக்கும் மாடலுக்கு விலை அதிகம். சிங்கிள்சிலிண்டர் 124.7cc இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 10.72bhp ஆற்றலையும், 10.6Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது, இது ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.


ஹோண்டா SP125


Honda SP 125 ஆனது மைலேஜ் மற்றும் ஸ்டைலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. மூன்று மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.86,017, ரூ.90,017 மற்றும் ஸ்போர்ட்ஸ் எடிஷன் ரூ.90,567 என்ற விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹோண்டா SP 125ல் காணப்படும் எஞ்சின் 124cc ஆகும். இது 10.72 bhp ஆற்றலையும், 10.9 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது, இதனுடன் 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


பஜாஜ் பல்சர் 125


பஜாஜ் பல்சர் அதன் செக்மென்ட்டில் மிகவும் பிரபலமான பைக் ஆகும். இது அதன் வலுவான வடிவமைப்பு, வேகம் மற்றும் ஸ்டைலுக்காக விரும்பப்படுகிறது. இந்த பைக்கின் விலை ரூ.80,416 -ல் தொடங்கி ரூ.94,138 வரை செல்கிறது. பஜாஜ் பல்சர் 125சிசி எஞ்சினுடன் வருகிறது.  இது 11.64 பிஎச்பி ஆற்றலையும், 10 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது, இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிளிப்கார்டில் Vivo V30... அடுக்கி நிற்கும் சிறப்பம்சங்கள் - விலை என்னவாக இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ