Poco F6 Sale: இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை என்பது மிகப்பெரியது. அதாவது உலகில் அதிகம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் பட்டியில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் அனைத்து விலை வகையிலும் ஸ்மார்ட்போன் வாங்குவதை விரும்புகிறார்கள். விலை உயர்ந்த மற்றும் அப்டேட்டான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் முதல் அடிப்படை தேவைக்கான ஸ்மார்ட்போன் வரை என பல தரப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தையில் முன்னணியில் இருக்க பல மாடல்களில் தங்களின் உற்பத்தியை மேற்கொள்கின்றன. இதனால் ஒவ்வொரு மாதத்திலும் பல நிறுவனங்களின் புது புது மாடல்கள் சந்தையில் குதுக்கின்றன. ஒவ்வொரு நிறுவனங்களுக்கு என தனி ரசிக பட்டாளாமே இருக்கிறது என சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட்போன்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களில் கூட நீங்கள் வாங்கலாம். பண்டிகை காலங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு என தள்ளுபடிகளும், எக்ஸ்சேஞ்ச் ஆப்பரும் கிடைக்கும் எனலாம். 


மே 29 முதல்...


அந்த வகையில், Poco நிறுவனம் அதன் புதிய மிட்-ரேஞ்ச் மொபைலான Poco F6 மாடலை வரும் மே.29ஆம் தேதி அன்று முதல் இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது. Poco F6 மொபைலில் Qualcomm நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8s Gen 3 சிப் உள்ளது. சமீபத்தில் அறிமுகமான iQOO Neo 9 மற்றும் Realme GT 6T ஆகிய இரண்டு மொபைல்களுக்கும் கடுமையான போட்டியளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு மொபைல்களிலும் இந்த பிராஸஸர் இருந்தாலும், Poco F6 மொபைலை விட மற்ற இரண்டும் சற்றே விலை அதிகம் எனலாம். எனவே, சந்தையில்  Poco F6 நல்ல வரவேற்பை பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், Poco F6 மொபைலை வாங்குவதற்கான மூன்று'நச்' காரணங்களை இங்கு காணலாம். தொடர்ந்து இதன் விலை என்ன என்பது குறித்து கடைசியில் பார்க்கலாம்.


மேலும் படிக்க |ஏர்டெல் சிம் கார்டு வச்சிருக்கீங்களா? நெட்பிளிக்ஸ் இலவசம்! தெரியுமா இந்த விஷயம்


மூன்று முக்கிய காரணங்கள்...


Poco F6 மொபைலின் பெர்மாமன்ஸ் அபாரமாக இருக்கும் என கூறப்படுகிறது. மொபைல் எவ்வித தடங்கலும் இல்லாமல் சீராக வேகமாக செயல்படும். நீங்கள் இதனால் லேட்டஸ்ட் கேம்களையும் எவ்வித பிரச்னையும் இன்றி ஸ்மூத்தாக விளையாடலாம். Qualcomm நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 Soc பிராஸஸர் கொடுக்கும் பெர்மாமன்ஸிற்கு ஏறத்தாழ Snapdragon 8s Gen 3 chip ஈடுகொடுக்கும் எனலாம்.இருப்பினும் நீண்ட நேரம் கேம் விளையாடுவதன் மூலம் மொபைல் சற்று வெப்பமடையலாம். 


அதுபோக, Poco F6 மொபைலின் கேமராவும் சிறப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புகைப்படங்கள் எடுப்பதற்கு அம்சமான வெளிச்சம் வரும் காலை மற்றும் மாலை வேளைகளில் இதன் கேமராவின் செயல்பாடு அபராமாக இருக்கிறது, அந்த நேரங்களில் எடுக்கும் புகைப்படங்களும் அபராமாக வருகிறது. நிறங்களும் அச்சு அசல் அப்படியே பதிவாவதாக கூறப்படுகிறது. அதிலும் 50MP கேமராவில்தான் புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. மற்ற கேமராக்களில் புகைப்படங்கள் சற்றே தட்டையாகவும், டீடெய்லிங் இல்லாமலு வருகின்றன. இது Portrait எடுக்கவும் பயன்படும். 


Poco F6 மொபைலின் டிசைனும் எடை குறைவானதாகும், இருப்பினும் டிஸ்ப்ளே திடமானதாக இருக்கிறது. 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே ஆகும். இதன் ரெப்ரேஷ் ரேட் 120hz ஆக உள்ளதால் நீங்கள் மொபைலை பயன்படுத்துவதற்கும் ஸ்மூத்தாக இருக்கும். மேலும்,இதில் கார்னிங் கோரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும் உள்ளது.


விலை என்ன தெரியுமா?


Poco F6 மொபைலின் விலை 29 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஐசிஐசிஐ கார்டு மூலம் இதனை நீங்கள் வாங்கினால் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் 27 ஆயிரத்து 999 ரூபாய்க்கே வாங்கலாம். இது பிளிப்கார்டில் வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த விலை 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்காகும். 


மேலும் படிக்க | Yamaha MT 15 : காலேஜ் பசங்களின் கனவு பைக்! இப்போது வெறும் ரூ.22,000க்கு வாங்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ