DTH சேவைக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்த TRAI - முழுவிவரம்...
DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என TRAI தெரிவித்துள்ளது!
DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என TRAI தெரிவித்துள்ளது!
DTH சேவை வழங்குவதில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஆனது வரும் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில், எந்தவிதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டார்கள் என்று டிராய் தெளிவாகத் குறிப்பிட்டுள்ளது.
தற்போது DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாதம் ஒரு தொகுப்பான கட்டணத்தை DTH சேவைக்குச் செலுத்தி வருகின்றனர். அதில் தங்களுக்கு விருப்பமான சேனல்களும் இருக்கும், பார்க்க விரும்பாத, மொழிபுரியாத சேனல்களும் இருக்கும்.
ஆனால், இனிமேல் அவ்வாறான நடைமுறை இருக்க கூடாது என TRAI அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த சேனலைப் பார்க்க விரும்புகிறார்களோ அந்த சேனலைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திரக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதற்காக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரத்தையும், ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று TRAI தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TRAI வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
டிசம்பர் 29-ஆம் தேதிக்குப் பின்னர் TRAI-ன் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவருகிறது. TRAI-ன் புதிய விதிகளின் படி தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி DTH மாதாந்திர கட்டண விவரத்தை எளிதாக TRAI மாற்றி அமைத்துள்ளது. இந்த மாதாந்திர வாடகைத் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பாகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டண் விதிக்கப்படாது.
பேக்கேஜ்களை பொறுத்தமட்டில் 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம். இதில் இலவச ஏர் சேனல், கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம். ஒருவேளை கட்டணம் செலுத்திப் பார்க்கும் சேனலாக இருந்தால், கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது இருக்கும்.
இந்தப் புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையில்லாத சேனல்களைப் பார்க்கும் வகையில் வற்புறுத்தத் தேவையில்லை. தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது, என குறிப்பிட்டுள்ளது.
புதிதாயக DTH சேவையினை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, DTH உபகரணங்கள் சேவைதொடக்க கட்டணம் ரூ.500 மிகாமல் வசூளிக்க வேண்டும் எனவும் TRAI குறிப்பிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாலேசன் சார்ஜ் 350-க்கு மிகாமலும், ஆக்டிவேசன் சார்ஜ் 150-க்கு மிகாமலும் வசூளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.