இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சேவையை அடுத்த மாதத்திலிருந்து தனது ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்பத்தவுள்ளது ட்ரூ காலர் Truecaller!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வரும் ட்ரூ காலர் செயலி, தற்போது இணைய அழைப்பினையும் அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. இந்த நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை தற்போது சோதித்து வருவதாகவும், விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்படுகிறது. 


இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வசதியை, 'ட்ரூ காலர் வாய்ஸ்' (Truecaller Voice) என்ற தனி செயலி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ட்ரூ காலர் நிறுவனம். 


மேலும், இந்த செயலி முதலில் ஆண்ட்ராய்ட் உபயோகிப்பாளர்களுக்கே அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


ட்ரூ காலர் நிறுவனம், 'ட்ரூ காலர் வாய்ஸ்' செயலி பற்றி தெரிவிக்கையில்., இந்த செயலி வாடிக்கையாளர்கள் மொபைல் நெட்வொர்க் அல்லது வை-பையை பயன்படுத்து 'இலவச, உயர்தர, தாமதமற்ற' தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள உதவும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயலியில், அழைப்பு பதிவுகள், எஸ்எம்எஸ் இன்பாக்ஸ், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். 


இன்னும் அறிமுகமாகாத நிலையில், ஆண்ட்ராய்டில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு 'ட்ரூ காலர் வாய்ஸ் சார்ட்கட்' என்ற பெயரில் இந்த வசதியையும் ட்ரூ காலர் நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது.


முன்னதாக கடந்த ஜூன் 10 அன்று ஆண்ட்ராய்டில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.