இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மைக்ரோ பிளாக்கிங் தளம் ட்விட்டர் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காததால் இந்தியாவில் ஒரு இடைத்தரகராக அதன் நிலையை இழந்துவிட்டது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  



இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்காத ஒரே சமூக ஊடக தளம் ட்விட்டர் மட்டுமே என்று அரசு கூறுகிறது. சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஜூன் 9 அன்று ட்விட்டர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியது.


மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஒரு நோடல் ஒப்பந்த நபர் (nodal contractual person) மற்றும் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரி (Resident Grievance Officer) ஆகியோரை நியமித்துள்ளதாகவும் கூறியது. "தலைமை இணக்க அலுவலர் பதவி நியமனத்தை இறுதி செய்வதற்கான" இறுதிக் கட்டங்களில் டிவிட்டர் நிறுவனம் இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 


Also Read | SOCIAL MEDIA: இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக், டிவிட்டர் முடக்கப்படுமா?


புதிய விதிமுறைகளுக்கு இணங்க ட்விட்டருக்கு கடைசி அறிவிப்பை வழங்கியதாக யூனியன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஜூன் 5ஆம் தேதியன்று கூறியது. 


சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் மே 26 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. பிற சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் அதை பின்பற்றத் தொடங்கிய நிலையில், ட்விட்டர் மட்டும் விதிமுறைகளை பின்பற்ற மறுத்துவிட்டது.


எனவே, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) சட்டம், 2000 இன் பிரிவு 79 இன் கீழ், இடைத்தரகராக செயல்படும்போது பின்பற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து விலக்கு பெறும் தகுதியை ட்விட்டர் தற்போது டிவிட்டர் இழந்துவிட்டது. இது மேற்கூறிய விதிகளின் விதி 7 இன் கீழ் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இனி டிவிட்டர் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.  


Also Read | மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR