Fleets-க்கு Bye Bye சொன்னது டிவிட்டர்! இந்த அம்சம் இன்றே கடைசி!!
ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets) இன்று முதல் நீக்கப்படுகிறது. இந்த அம்சம் குறித்த ஆர்வம் பயனர்களுக்கு மத்தியில் குறைந்துவந்த நிலையில் Fleets-ஐ ட்விட்டர் தனது பக்கத்தில் இருந்து நீக்குகிறது.
ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets) இன்று முதல் நீக்கப்படுகிறது. இந்த அம்சம் குறித்த ஆர்வம் பயனர்களுக்கு மத்தியில் குறைந்துவந்த நிலையில், அதிகப்படியான பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தாததால் Fleets-ஐ ட்விட்டர் தனது பக்கத்தில் இருந்து நீக்குகிறது.
2006 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விதமான புதிய அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்து முக்கிய நிகழ்வுகளுமே டுவிட்டரில் அறிவிக்கப்படுகின்றன. அனைத்து சமூக வலைதளங்களிலும் முக்கியமானதாக ட்விட்டர் கருதப்படுகிறது.
உலகளவில் ட்விட்டரில் (Twitter) கணக்கு வைத்திருக்காத பிரபலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு ட்விட்டர் அனைவரது வாழ்வோடும் பின்னிப் பிணைந்து விட்டது.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ட்விட்டர் fleets என்ற புதிய வசதியை ட்விட்டர் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது போல ட்விட்டரிலும் இந்த வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது. ஆனால் பயனர்களிடம் இருந்து போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் இந்த வசதியை இன்றுடன் நிறுத்தப் போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ALSO READ:ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் ஜூலை 14-ம் தேதி, “டிவிட்டரில் இருந்து fleets வசதியை நிறுத்திவிட்டு, மற்ற புதிய புதுப்பிப்புகளை கொண்டு வர கவனம் செலுத்த உள்ளோம். Fleets வசதியை பயனர்கள் அதிகம் உபயோகிப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் அப்படி நடக்கவில்லை." என்று கூறியது.
Fleets மூலம் தங்களுக்கு கிடைத்த பாடத்தை நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் உரையாடல்களில் கலந்துகொள்ளக் கூடிய பிற வழிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ளீட்ஸ் (Fleets) மூலம் கற்றுக்கொண்ட சில விஷயங்களைப் பகிர்ந்த ட்விட்டர், ட்வீட்களை பதிவிடுவதில் சிலருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வாக ஃப்ளீட்ஸ் உருவாக்கப்பட்டது என்று கூறியது. எனினும், ஏற்கனவே ட்வீட் செய்து கொண்டிருந்தவர்கள் மட்டுமே ஃப்ளீட்சைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிறுவனம் உணர்ந்தது. மேலும் அவர்கள் முக்கியமாக தங்கள் ட்வீட்களைப் பெருக்கவும், மக்களுடன் நேரடி உரையாடல்களை நடத்தவும் அப்படி செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டது. ஆகையால் பெரிய அளவிலான பிரத்யேக பயன்பாடு இல்லாத ‘ஃப்ளீட்சை’ நிறுத்த நிறுவனம் முடிவெடுத்தது.
ALSO READ: டிவிட்டரில் இதலாம் நடக்குதா? எச்சரிக்கையாக இருப்பது முக்கியமானது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR