ட்விட்டரில் Retweet செய்வதற்கு முன்பு உங்களுக்கு எச்சரிக்கை வரும்! விரைவில் புதிய அம்சம்!!

இனிமேல் எந்தவொரு பதிவு அல்லது புகைப்படத்தை மறு ட்வீட் செய்யும் போது பயனர்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், அனைவருக்கும் கிடைக்கும்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 13, 2020, 09:21 AM IST
ட்விட்டரில் Retweet செய்வதற்கு முன்பு உங்களுக்கு எச்சரிக்கை வரும்! விரைவில் புதிய அம்சம்!!
Photo: Zee Media Network

Twitter Feature Plan: மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் (Twitter) தனது தளத்திற்கு புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. தகவல்களின்படி, ட்விட்டர் விரைவில் ரீ-ட்வீட் (Retweet) தொடர்பான புதிய அம்சத்தை கொண்டு வருகிறது. இந்த அம்சத்தின் கீழ், இனிமேல் எந்தவொரு பதிவு அல்லது புகைப்படத்தை மறு ட்வீட் செய்யும் போது பயனர்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். இடுகையிடுவதற்கு முன்பு பயனர்கள் படிக்கக்கூடிய கட்டுரைக்கான இணைப்பை இது கொண்டிருக்கும். எனவே எந்த செய்தியும் அவசரமாக பகிரப்படுவது தவிர்க்கப்படும். அந்த செய்தி நம்பகத்தன்மை குறித்து தெரிந்துக்கொள்ள உதவும். ஒருவேளை சந்தேகம் இருந்தால், அந்த பதிவை ரீ-ட்வீட் செய்யவேண்டி இருக்காது.

இந்த செய்தியும் படிக்கவும் | அறிந்துக்கொள்வோம்; ட்விட்டரில் ஒரு திட்டமிடப்பட்ட ட்வீட்டை அமைப்பது எவ்வாறு?

போலி செய்திகள் மற்றும் தவறான பதிவுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் சோதிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், பயனர்களுக்காக இந்த அம்சம் கிடைக்கும். ட்விட்டர் (Twitter) தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்ததன் மூலம் இந்த தகவலை மக்களுடன் பகிர்ந்துள்ளது.

 

 

ட்விட்டர் விரைவில் தனது "ஃப்ளீட்ஸ்" (Fleets) அம்சத்தையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பிரேசில் மற்றும் இத்தாலிக்குப் பிறகு, நிறுவனம் தனது அம்சத்தை வழங்கும் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும். அத்தகைய அம்சம் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) உள்ளது.

இந்த செய்தியும் படிக்கவும் | தனது ஊழியர்களுக்கு "work from home" ஐ நிரந்தரமாக்கிய ட்விட்டர்.

ட்விட்டரின் (Twitter) கூற்றுப்படி, பயனர்கள் (User) ஃப்ளீட்ஸில் போடும் பதிவுகள் 24 மணி நேரத்தில் தானாகவே மறைந்துவிடும் லைக், ஷேர் மற்றும் ரீ-ட்வீட் செய்ய முடியாது. தனிப்பட்ட முறையில் மெசேஜ் மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில், இது ஆப்பிளின் ஐஓஎஸ் (Apple los) மற்றும் கூகிளின் (Google) ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும். இது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள 'ஸ்டோரி' அம்சத்தைப் போலவே இருக்கும்.

இந்த செய்தியும் படிக்கவும் | ட்விட்டரில் "Tweet" மட்டுமல்லாமல், நீங்கள் "Fleet" செய்ய முடியும்

இந்த நிறுவனம் கூறுகையில், "ஃப்ளீட்சை (Twitter Fleets) மறு ட்வீட் செய்ய முடியாது. எந்தவொரு விருப்பங்களும் பொது கருத்துக்களும் இருக்காது. இதுபோன்ற செய்திகளைப் பற்றி யாராவது கருத்துத் தெரிவிக்க விரும்பினால், இன்பாக்ஸில் உள்ள பயனருக்கு நேரடியாக ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் உரையாடலைத் தொடரலாம்.