கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ட்விட்டர் (twitter) தனது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளவில் சக்திவாய்ந்த தனது 5,000 பேர் கொண்ட பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்துள்ள ட்விட்டர் ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா அலுவலகங்களை தளமாகக் கொண்ட ஊழியர்களுக்கு இந்த முறைமையை கட்டாயமாக்கியுள்ளது.


ஏற்கனவே அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள ட்விட்டர் தளம், நேரில் வர வேண்டிய அவசியத்தை உணரும் ஊழியர்களுக்காக அமெரிக்க அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


"உலகளவில் அனைத்து ஊழியர்களுக்கும் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதற்கான நிகழ்தகவைக் குறைப்பதே எங்கள் குறிக்கோள் - மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மாள் பாதிப்படைய கூடாது என்பதை நாம் கருத்தில் கொண்டுள்ளோம்" என்று நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


"பணியாளர் கூட்டங்கள், அனைத்து வித வேலைபாடுகள் மற்றும் பிற முக்கியமான பணிகள் போன்றவை தொலைதூர பங்கேற்புக்கு உகந்ததாக இருப்பதை உறுதிசெய்வதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்றும் ட்விட்டர் மேலும் குறிப்பிட்டுள்ளது.


அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, ட்விட்டரின் ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியா அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமாக இருக்கும்.


"இது நமக்கு ஒரு பெரிய மாற்றமாக இருக்கும் போதிலும், நாம் நாங்கள் ஏற்கனவே தொலைதூரத்தில் அதிக அளவில் விநியோகிக்கப்பட்ட பணியாளர்களை நோக்கி நகர்ந்துள்ளோம்" என்றும் ட்விட்டர் இதுகுறித்து தெரிவித்துள்ளது.


முன்னதாக, ட்விட்டர் தனது ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கான தங்களது அனைத்து அத்தியாவசிய வணிக பயணங்களையும் கட்டுப்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தது.


"தொடர்ந்து நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், விரைவாக வளர்ந்து வரும் இந்த நிலைமைக்கு பதிலளிக்க எங்கள் உள் கொள்கைகளை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். இதுதொடர்பான தகவல்களை கடந்த பிப்ரவரி 29 அன்று, நமது பணியாளர்களுக்கு நாம் அளித்துள்ளோம். இதன்மூலம் அனைத்து முக்கியமான வணிக பயணங்களையும் நிகழ்வுகளையும் நாங்கள் இடைநிறுத்துகிறோம்" என்றும் ட்விட்டர் இதுதொடர்பான ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


"ட்விட்டருடன் பணியாற்றும் எவரும் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவோ அல்லது பரப்பக்கூடிய அபாயத்தைக் குறைப்பதையோ குறிக்கோளாய் கொண்டுள்ளனர். நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும், COVID-19 பரவுவதைக் குறைக்கவும் இந்த செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்" என்று ட்விட்டர் மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.