நோகியா ஜி21 தள்ளுபடி: நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகின்றன. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் நோகியா ஸ்மார்ட்போனில் பல சிறந்த தள்ளுபடிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த அசத்தலான விற்பனையில் நோகியாவின் பிரபல மற்றும் சக்திவாய்ந்த மாடல் போனை ரூ. 1000-க்குள் வாங்கலாம். மிகக் குறைந்த விலையில் இதை வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்லாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்களும் ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த பிளிப்கரட் நோகியா டீல் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் நீங்கள் ஒரு அற்புதமான போனை மிகக்குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த நோகியா போன் மற்றும் பிளிக்பார்ட் விற்பனையில் அதற்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


நோகியாவின் எந்த ஸ்மார்ட்போனில் சலுகைகள் கிடைக்கின்றன? 


நாம் இந்த பதிவில் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை பார்க்கலாம். இதன் அசல் விலை ரூ. 17,000 ஆகும். எனினும், இந்த போன் பிளிப்கார்டில் 11 சதவீத அதிரடி தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த போனின் விலை ரூ. 14,999 ஆக குறைந்துவிடுகிறது.


பிளிப்கார்ட் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனில் நல்ல தள்ளுபடியை அளித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த போனை வாங்கும் பயனர்கள் இதில் அதிகப்படியான நன்மைகளை பெற முடியும். 


மேலும் படிக்க | இந்தியாவில் அறிமுகமாகும் Nokia G60 ஸ்மார்ட்ஃபோன் - முழு விவரங்கள் 


பிளிப்கார்ட் அளிக்கும் தள்ளுபடியோடு இதில் கிடைக்கும் சலுகைகள் முடிந்துவிடவில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பினால், இந்த ஸ்மார்ட்போனை இதுவரை இல்லாத சிறந்த டீலில் வாங்க முடியும். மிகக் குறைந்த கட்டணத்தில் அதை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். இதை எப்படி செய்வது என இங்கே காணலாம். 


பரிமாற்ற போனஸ் பெறுதல்


இந்த ஸ்மார்ட்போனில் மற்ற சலுகைகளும் கிடைக்கின்றன. நிறுவனம் இந்த போனில் ரூ. 14,150 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற சலுகையை வழங்குகிறது. இந்த சலுகை பரிமாற்றப்படும் போனின் நிலையைப் பொறுத்தது. வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பும் ஸ்மார்ட்போன் நல்ல நிலையில் இருந்தால், எக்ஸ்சேஞ்ச் போனஸின் முழுத் தொகையையும் அவர்கள் பெற முடியும். இந்த சலுகைக்கு பிறகு, இந்த போனின் விலை, ரூ. 14,999 இலிருந்து குறைக்கப்படும். வாடிக்கையாளர்கள் பின் இந்த போனை வெறும் ரூ. 849-க்கு வாங்கலாம். 


இந்த ஸ்மார்ட்போன் திறன் அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்தது. இதன் வரம்பில் உள்ள பிற போன்களை காண்கையில், இது பல நல்ல அம்சங்களை வழங்குகிறது. ஆகையால் பிளிப்கார்ட் சலுகையை பயன்படுத்திக்கொண்டு இந்த போனை வாங்குவது பயனர்களுக்கு மிக நல்ல விஷயமாக இருக்கும்.


மேலும் படிக்க | பாஸ்வேர்ட் பகிர்வை குறைக்க நெட்பிளிக்ஸ் மறைமுக திட்டம் - இனி விளம்பரமும் வரும்...! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ