அசத்தலான Vivo T1 5G போனின் விலை வெறும் ரூ. 1,990: கலக்கும் பிளிப்கார்ட் சேல்
Flipkart Vivo Carnival Sale: Vivo சமீபத்தில் Vivo T1 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சேலில் இந்த போனை வெறும் 1,990 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று பார்க்கலாம்.
பிளிப்கார்ட் விவோ கார்னிவல் சேல்: விவோ கார்னிவல் சேல் பிளிப்கார்ட்டில் நடந்து வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது, இன்று அதாவது ஏப்ரல் 7ஆம் இதன் தேதி கடைசி நாளாகும். இந்த சேலில் விவோ ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
நீங்கள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் இருந்து உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவோ சமீபத்தில் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த பிளிப்கார்ட் சேலில், இந்த போனை வெறும் 1,990 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று இந்த பதிவில் தெருந்துகொள்ளலாம்.
பிளிப்கார்ட் விவோ கார்னிவல் சேல்: விவோ டி1 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
விவோ டி1 5ஜி 4ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் தொடக்க விலை ரூ. 19,990 ஆகும். ஆனால் சேலில் இந்த செல்போன் ரூ.15,990க்கு கிடைக்கிறது. அதாவது போனில் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறையும்.
மேலும் படிக்க | ரூ.549-க்கு விற்பனைக்கு வந்திருக்கும் Realme C31 ஸ்மார்ட்போன்
பிளிப்கார்ட் விவோ கார்னிவல் சேல்: விவோ டி1 5ஜி வங்கி சலுகை
விவோ டி1 5ஜி- ஐ வாங்க எச்டிஎஃப்சி டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, போனின் விலை ரூ.14,990 ஆக குறையும். இதற்குப் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும், அதாவது பரிமாற்ற சலுகையும் இதில் உள்ளது. இந்த சேலில், இந்த போனுக்கு எவ்வளவு எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது என்பதை காணலாம்.
பிளிப்கார்ட் விவோ கார்னிவல் சேல்: விவோ டி1 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை
விவோ டி1 5ஜி-ல் ரூ.13,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகையை பெற, பழைய போன் நல்ல நிலையில் இருக்க வேண்டும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்ற சலுகையில் 13 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடிந்தால், போனின் விலை ரூ.1,990 ஆகக் குறைந்துவிடும்.
மேலும் படிக்க | அசத்தலான பிளிப்கார்ட் சேல்: விவோ லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில் ரூ. 15,000 தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR